பக்கம் எண் :

236

  நீதி நூல்
 
 
நாடும்வசை யுயிருய்யே னென்றேனீ
   மாய்ந்திடின்முன் னான்கொ டுத்த
ஓடுமற்ற மருகர்க்காம் நான்றுகொள்நீ
   யெனக்கயிறொன் றுதவி னாளே.
  கூனல் வாய்ந்த தாய்க்கிழவியாம் மாமி என்னைக் கள்ளும் ஊனும் களவுசெய்துகொண்டு வரும்படி கட்டளையிட்டாள். `நான் சிறப்பு மிக்க பார்ப்பானன்றோ?ழு எனக் கூறினேன். `கள்ளும் ஊனும் உண்டால் உன்னுடைய பாவம் எல்லாம் அகலும்,ழு என்றாள். `ஐயோ! நாடு பழியுரைக்கும்; யானும் உயிருடன் வாழ முடியாது,ழு என்று கூறினேன். `நீ மாண்டுவிட்டால் உன்கையில் நான் தந்த பிச்சை ஓடு இனியுள்ள மருகர்களுக்கு ஆகும். நீ தூக்கிட்டுக்கொண்டு இறந்துவிடு,ழு என்று கயிறொன்று தந்துதவினாள்.
  கோடு-கூனல். பாடு-சிறப்பு. வசை-பழி. நான்று கொளல்-தூக்கிட்டுக் கொளல்.
 

12

  பசிமண் ஓடு பற்றலால் முத்தேவர் பாங்கானோம்
489
பசையறவெம் மாவியன்னாள் கைப்பொருளெ
   லாம்பறிக்கப் பசியால் நான்கு
திசைமுகமு நோக்கலாற் றிசைமுகனா
   னோம்வாயிற் றீயாள் இட்ட
வசையான மண்ணுண்டு மாயனா
   னோங்கையின் வாங்கு மோட்டால்
இசைமேவு மீசனா னோம்புவியில்
   நமையொப்பார் எவர்தாம் அம்மா.
  எம் உயிரையொத்த பொதுமகள் எம்முடைய கைப்பொருள் எல்லாங் கவர்ந்து யாம் வெறுமையானபின் பசியால் நாற்புலமும் நோக்கலானேம்; அதனால் நான்முகனானோம். அக்கொடியாள் வைது திட்டி வாயில் மண்ணை யள்ளியிட்டாள். அதனால் மண் உண்ட மாயவனானோம். அவள் தரும் ஓட்டைக் கையில் வாங்கியதால் புகழ் மிக்க முதல்வனாம் ஆண்டவனானோம். ஆதலால், முத்தேவராகிய நம்மை ஒப்பவர் இவ்வுலகில் யாவருளர்?
  பசையற-பொருள் நீங்க; வறுமையுற. ஈசன்-முதல்வன்; ஆண்டான.் புவி-உலகம்
 

13