பக்கம் எண் :

239

  கணிகையரியல்பு
 
 
சாமியைநீங் கேனென்றேன் உனைச்சொன்ன
   தன்றுநீ சாமி யானாற்
பூமியிலுன் மாற்றென்ன எடையென்ன
  விலையென்ன புகல்வா யென்றாள்.
  (பொதுமகள்) ழுசாமி! உன்னைப் பிரியேன்,ழு என்றாள். பிறகு பிரிந்து நீங்கினாள். அவளைப் பார்த்து, ழுமின் போன்றவளே! நீ சொல்லிய குற்றமற்ற சொல்லைக் கடந்தது ஏன்?ழு என்றேன். அவள், ழுநீ தொகை தொகையாகத் தந்த சாமியை அல்லவா? யான் நீங்கேன், என்று கூறினேன்,ழு என்றாள். ழுயான் சாமி (பொன்) என்பது உன்னையன்று, நீ சாமி--பொன்--ஆனால், உலகில் உன்னுடைய மாற்று எவ்வளவு? எடை எவ்வளவு? விலை எவ்வளவு கூறுக,ழு என்றாள்.
  சாமி-பொன். தோமிலா-குற்றமில்லாத. திறம்பல்-மீறல்; கடத்தல்.
 

17

  அழுக்கே உருவாம் பொதுமகளைஅடைவார் யாரே
494
ஒருவனுண்ட கலத்துண்ண வொருவனுடை
  யினையுடுக்க வொருவன் றூங்கும்
திருவமளி துயிலமனம் பொருந்தாது
  பலரெச்சஞ் சேர்ப டிக்கம்
பொருவுவே சியர்வாயெச் சிலையுண்ணப்
  பலபேரைப் புணர்ந்த சுத்தம்
உருவுகொண்ட தனையவர்தோள் சேரவே
   யெவர்க்குமன மொன்றுங் கொல்லோ.
  உலகில் ஒருவன் உண்ட இலை கலம் முதலியவற்றில் எவரும் உண்ணார்; உடுத்த உடையை எவரும் உடார்; உறங்கும் படுக்கையில் எவரும் உறங்கார். பொதுமகள்வாய் பலர் எச்சில் துப்பும்படிக்கம் போன்றது. அவர் வாயெச்சிலை உண்ணவும், வரையறையில்லாமல் எல்லாரையும் கூடி வாலாமை-அழுக்கே-உருவாய்த் திரிந்த அவர்கள் தோளைச் சேரவும் யாருக்குத்தான் மனம் பொருந்தும்?
  அமளி-படுக்கை. துயிலல்-உறங்கல். படிக்கம்-எச்சில் துப்பும் ஏனம். அசுத்தம்-வாலாமை; அழுக்கு.
 

18