| | நீதி நூல் |
| | எல்லாம் பறித்துப் பிச்சை எடுக்கவைப்பாள் பொதுமகள் |
| 495 | பொருளின்சே டத்தையிவட் களித்தோம்வாய்ச் சேடமெனும் பொருள ளித்தாள் தருமமெனத் தனமளித்தோ மெமக்கிவளுந் தருமமெனத் தனம ளித்தாள் அருமையாம் பலியளித்தோ மிவளெமக்குப் பலியளித்தாள் ஆழி சூழ்ந்த இருநிலத்தி னீதன்றி யின்னுமிவ ளென்செய்வா ளெமக்குத் தானே. |
|
| | மிக்க பொருள் முழுவதும் பொதுமகளுக்கு அளித்தோம். அவளும் அருட்கொடை என்று சொல்லத் தகுந்த வாய்எச்சிற் பொருளை எமக்கு நல்கினாள். கற்பகமரமும் அரசும் போன்று பொன் மணி முதலியவற்றை அவள் நினைத்தவாறெல்லாம் கொடுத்தோம். அவளும் அறக்கடவுள் தரும் புண்ணியப்பயனெனக் கொங்கைப் பொன் அளித்தாள். சிறப்புமிக்க பூ நீர் பால் பழம் முதலியவற்றால் வழிபாடு செய்வதாகிய பலிகொடுத்தோம். அவளும் திருவோடும் அதன்கண் இடும் பிச்சைச்சோறும் நல்கினாள். கடல் சூழ் உலகில், நாம் செய்வதற்கெல்லாம் சிறந்த ஈடு செய்தனள். இவையன்றி வேறென் செய்வாள்? |
| | சேடம்-உயர்வு. சேடம்-மிச்சம்-மிச்சம்; எச்சில். பலி-பூசை. பலி-பிச்சை. |
| | 19 |
| | கொலைபுலையின் மிக்ககுற்றம் புரிபவள் பொதுமகள் |
| 496 | கொலைஞர்தமைக் கொலை செய்து கள்வரைவெஞ் சிறையிலிட்டுக் குற்றம் செய்யும் புலைஞரைத்தண் டித்தடக்கு நம்மிங்கி லீசுமன்னர் புருட ராவிக்கு உலைவைக்குந் தன்மையளாய்ப் பாதகமெ லாந்திரண்டோ ருருவாய் வந்த விலைமாதைக் கொல்லாம லுலகமிசை யாதுசெய விடுத்தா ரம்மா. |
|
| | நம்மை ஆளும் ஆங்கிலேயமன்னர் எல்லாத் துன்பமும் ஒருங்கு தரவல்ல பெரும்பாவமாம் கொலை செய்வோரைத் தூக் |