பக்கம் எண் :

242

  நீதி நூல்
 
 
குடிகெடுக்குந் தொழிலுங்கட் கில்லையென
    வெறுத்தனரக் குணங்க ளெல்லாம்
படியிலுமக் கமையுமேற் கணவர்திரு
    வருளுமக்கும் பலிக்கு மன்றே.
  அழகு மிக்க கணவர் நம்மை வெறுத்துப் பொதுமகளை விரும்பி அவளுக்கே அடிமையாகிவிட்டனரே என்று வருந்தும் ஒளிமிக்க கண்ணையுடைய மாதரே! உங்கட்கும் அப் பொதுமகள்பாலுள்ள வன்கண்மையும், அளவிலாத ஆடவர் இணக்கமும், உயிர் கொல்லுதலும், ஏமாற்றுதலும், குடும்பத்தைக் கெடுக்குங் கொடுந்தொழிலும் அமையுமானால் கணவர் திருவருள் உங்களுக்குக் கைகூடும். (பொதுமக்கள்பால் உண்டாம் தீக்குணங்கள் இவை எனக் குறித்தபடி. குலமகட்கு வேண்டுமென்பதன்று)
  சம்போகம்-இணக்கம். படியில்-உலகில். பலிக்கும்-கைகூடும்.
 

22

  விற்றதை மீட்டும் விலைமாதர் விற்பர்
499
பகருவங்கம் பலசரக்குத் தரகுசெல
    வாள்கள்முதற் பணங்கூட் டின்றி
யகனிதம்பச் சரக்கொன்றைப் பலருக்குந்
    தினந்தினம்விற் றரும்பொன் வாங்கிப்
புகலுமிந்தச் சரக்குங்கை நீங்காது
    வணிகஞ்செய் பொதுமின் னார்போல்
சகமதனிற் பேரறிவி னோடுவா
    ணிபஞ்செய்யும் சமர்த்த ருண்டோ.
  வணிகத்துக்கு வேண்டுவ கப்பல், பொருள்கள், பல்பண்டம், தரகாள், கைமுதல், பங்காளர் முதலிய பலவாம். விலைமகளிர் செய்யும் உடல்வணிகத்துக்கு வேண்டுவது உடல் ஒன்றேயாம். வணிகர்கள் விற்ற சரக்கை வாங்குவார்க்கே உரித்தாக்கிவிடுவர். பொதுமகளோ விற்ற உடலையும் தமக்கே உரித்தாக்கித் தம்பாலே வைத்துக் கொள்வர். ஆயின், பொதுமகள்போல் திறம் பெற வணிகஞ் செய்யும் தன்மையர் எவருளர்?
  வங்கம்-கப்பல்.
 

23