| | கணிகையரியல்பு |
| | இருமனத்தால் பிணமாதல் இயையும் பொதுமகட்கே |
| 500 | கலவிசெய்த மாதென்னை விலைகேட்டா ளுடனொக்கக் கலந்து காம நலமுண்ட வுனக்குவிலை யேதென்றேன் சவமனைய நான்சு கிக்க இலையென்றாள் பொய்யென்றேன் வள்ளுவர்கூ றியகுறளா மினிய நூலில் விலைமாதைச் சேர்தல்பிணந் தழுவியதை யொக்குமென்றார் வீணோ வென்றாள். |
|
| | என்னுடன் இன்புற்ற பொதுமகள் அவ் இன்ப விலையாம் பொருள் ஈக என்றாள். யான், `நீயும் என்னுடன் இன்புறவில்லையோ? என்றேன். `இல்லைழு யென்றாள். ஏன் என்றேன். `யான் பிணமாம் நிலையொத்து மனம் பொருந்தாதிருந்தேன். அதனால் எனக்கு இன்பமில்லை. இவ்வுண்மை, திருவள்ளுவ நாயனார் ழுபொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையிலேதில் பிணந்தழீஇ யற்றுழு என்றருளிய தமிழ்மறையாலுணர்ந்து கொள்க,ழு என்றனள். |
| | காம நலம்-இன்பம். |
| | 24 |
| | தந்தையைக் கொல்லவும் பொதுமகள் சாற்றுவள் |
| 501 | தையலில்லம் புகும்போதென் சுதன்குரலைக் கேட்டொதுங்கித் தாழ்வா ரத்திற் பையவொன்றிச் செவிகொடுத்தேன் பாலனைப்பார்த் தக்கோதை பணமீ யென்றாள் ஐயனிறந் திடிலெல்லா முனதென்றா னவன்தூங்கும் சமையம் பார்த்தோர் சையமெடுத் தவன்றலைமேற் போடுவாய் போடுமுன்நான் தழுவே னென்றாள். |
|
| | பொதுமகள் வீட்டிற்குள் நுழையும்போது என் மகன் குரலைக் கேட்டேன். சற்று ஒதுங்கித் தாழ்வாரத்தில் நின்று ஒற்றுக் கேட்டேன். அப்போது பொதுமகள் என் மகனைப் பார்த்துப் பணம்கொடு என்றாள். அவன், `என் தந்தை இறந்து விட் |