பக்கம் எண் :

244

  நீதி நூல்
 
  டால் எல்லாப் பொருளும் உன்னுடையதுதான்,ழு என்றான். அவள், `உன் தந்தை தூங்கும்போது அவன் தலையில் பெருங்கல்லைப் போட்டுக் கொன்றுவிடு; அதற்கு முன் உன்னை நான் சேரேன்,ழு என்றாள்.
  சுதன்-மகன். குரல்-பேச்சொலி. சையம்-கல்.
 

25

  பலர்க்கிணங்கும் பொதுமகள் பார்க்கிலினத் தலைமணியே
502
ஒருமாது தன்றுணைவன் சீடனைமற்
    றொருமாதவ் வும்பர் கோனை
ஒருமாது சோதரரை வரைச்சேர்ந்து
    கன்னியரென் றுயர்பேர் கொண்டார்
அருமையா வெமைச்சேயர் சோதரர்சீ
    டரையிம்பர்க் கரசைச் சேரும்
பொருண்மாதக் கன்னியர்க் கெலாஞ்சிரோ
    மணியென்னப் புகல லாமே.
  முன்னாளில் தாரை என்பவள் வியாழன் மனைவி. அவள் வியாழனின் மாணாக்கனான திங்களைக் கரவிற் கூடிப் புதனைப் பெற்றாள். கவுதமர் மனைவி அகலியை வானவர்க்கோனைக் கூடினள். பாஞ்சாலன் மகளாகிய துரோபதை, பாண்டுவின் மக்களான தருமன் முதலிய உடன்பிறந்தார் ஐவரையும் கூடினள். இவர்கள் மூவரும் கர்புடைய கன்னியரெனப் புகழப்படுகின்றனர். இவ் விலைமாதோ நம்மை, நம் மக்களை, நம் உடன் பிறந்தாரை, நம் மாணாக்கர்களை, உலகாள் வேந்தரை ஓவாது கூடினள். ஆயின் இவள் அம் மூவர்க்கும் தலைமணி போன்றவளாவள்.
  துணைவன்-கணவன். சீடன்-மாணாக்கன். சோதரர்-உடன்பிறந்தார்.
 

26

  பொதுமகட்குக் கடவுள் பொன்னவனே யாவன்
503
விதிமுதன்மூ வரிலெவரும் கடவுளெனச்
    சிற்றிடையை வினவப் பூவாழ்
எதிரில்தம னியனென்றா ளரன்கோயிற்
    றாசியுனக் கியல்போ வென்றேன்