| | கணிகையரியல்பு |
| | நிதியுடன்மைந் தரைப்படைத்தன் னாரதையென் காலில்வைத்து நிதமும் வீழ மதிபடைத்துத் தமனியப்பேர் தான்படைத்த விதிக்கிணையார் மகிப வென்றாள். |
|
| | ழுநுண்ணிடையாய்! படைப்போன் காப்போன் துடைப்போன் ஆகிய அயன் அரி அரன் என்னும் மூவருள் நீ வழிபடுங் கடவுள் யாவர்?ழு என்றேன். ழுசெந்தாமரையில் வீற்றிருக்கும் ஒப்பில்லாத படைப்போனாகிய பொன்னன்,ழு என்றாள். ழுநீ அரன் கோவில் திருத்தொண்டு செய்யும் பணிப்பெண் ஆயிற்றே! நீ சொல்லுவது பொருந்துமோ? என்றேன். ழுசெல்வத்துடன் மக்களைப் படைத்து அம் மைந்தர் நாளும் அச் செல்வத்தை என் காலில் வைத்து வீழ்ந்து வணங்கும்படியான அறிவினையும் அவர்களுக்குப் படைத்துப் பொன் எனும் பேர் தனக்குப் படைத்துக்கொண்ட படைப்போனுக்கு இணையாக யாவரைச் சொல்லலாம் தலைவ,ழு என்றாள். |
| | விதி-படைப்போன். பூ-செந்தாமரை. எதிரில்-ஒப்பில்லாத. தமனியன்-பொன்னோன். தாசி-கோயிற் பணிப்பெண். தமனியம்-பொன். மகிப-தலைவ. |
| | 27 |
| | பொதுமகள் புணர்வு பொன்னால் ஆகும் |
| 504 | அந்தமுளா ளுரிமையா வத்தமுளார் வாலியா வவன்பின் றோன்றி வந்தவனா னாயினேன் மூவரிலோ ரரியரியின் மகனை யன்னாள் பந்தமுறச் செய்தனனம் மிருவரையார் சேர்த்துவைப்பார் பாவா யென்றேன் ஐந்துலோ கங்களுளோ ரரிநமையோ ரரிசேர்க்கும் அறிநீ என்றாள். |
|
| | அழகுள்ளவள் (சுக்கிரீவன்) மனைவியாகவும், பொருள் உள்ளவர்கள் அவளை மனைவியாகக் கைப்பற்றும் வாலியாகவும், யான் மனைவி வேண்டும் சுக்கிரீவனாகவும் உள்ளேன். முக்கடவுளருள் ஒருவனாகிய திருமால் சுக்கிரீவனை அவன் மனைவியுடன் சேர்த்து வைத்தான். நம்மிருவரையும் இணக்கி வைப்பவர் யாவர்? பாவையே! சொல் என்றேன். சுரங்கத்தெடுக்கும் |