| | நீதி நூல் |
| | ஐவகை முதற் பொருள்களுள் ஒன்றாகிய பொன் நம் இருவரையும் ஒரு அமளியில் சேர்த்துவைக்கும் நீ அறி என்றாள். |
| | அந்தம்-அழகு. உரிமை-மனைவி. அத்தம்-பொன். அரி-திருமால். அரியின் மகன்-சுக்கிரீவன். பந்தம்-இணைப்பு. அரி-பொன். அரி-கட்டில்; அமளி. |
| | 28 |
| | அத்தை சொக்குத்தூள் அடிக்குப் பொன் தூளாம் |
| 505 | இனியாளை நோக்கியத்தை சக்கிரிக்குச் சொக்குத்தூ ளிடுவா யென்ற தொனிகேட்டுச் சினந்துநான் குயவனோ வெனைமயக்கத் தூளோ வென்றேன் தனியரசாஞ் சக்கிரிநீ யாகையினின் னடிமலர்தோய் தான மெல்லாம் நனியேசொக் கெனுங்கனகப் பொடியிறையென் றேன்முனிதல் நன்றோ வென்றாள். |
|
| | உயிரினும் இனியாளாகிய பொதுமகளைப் பார்த்துத் தாய்க்கிழவியாம் அத்தை, `அறிவிலாக் குயவனை ஒத்த செல்வனுக்கு நம்பால் பிணிக்கும் மயக்கத்தூள் இடுக,ழு என்றாள். அக்குரலொலி கேட்டு யான் சினங்கொண்டு, `நான் குயவனோ? என்னை மயக்க மருந்துப் பொடியோ? என்று கூறினேன். அவள், `உலகைத் தனியரசாளும் ஆணைச் சக்கரத்தையுடைய வேந்தர் நீராகையால், உம்முடைய அடிமலர் படும் இடங்களெல்லாம் மிகுதியும் பொன் தூள் பரப்புக என்று கூறினேன். இதற்கு நீர் சீற்றம் கொள்ளுதல் நன்றோ,ழுஎன்றாள். |
| | சக்கிரி-மண் அறுக்கும் சக்கரத்தைக் கருவியாகக்கொண்டுள்ள குயவன். சொக்குத் தூள்-மயக்கப்பொடி. சக்கிரி-ஆணைச்சக்கரத்தைச் செலுத்தும் ஒப்பில்லாத மன்னர் மன்னனாம் வேந்தன். சொக்கு-பொன். முனிவு-சினம்; சீற்றம். |
| | 29 |
| | இருதிங்களில் மகப்பெறுதல் இயற்றிய தவப்பயன் |
| 506 | எனையன்றி மற்றோரைச் சேர்ந்தறியே னென்றகன்னி யிருதிங் கட்குள் தனையனீன் றாள்புதுமை என்னென்றேன் நினையும்மை தழுவி யிச்சேய் |
|