| கணிகையரியல்பு |
| சினையாயெண் மதியிலிறந் தேனிகத்தும் உனைப்புணரச் செய்த நோன்பான் முனையல்கு மிருமாத நிறைந்துடனிம் மகவீன்றேன் முதல்வ என்றாள். |
|
| என்னையன்றி வேறொருவரையும் சேர்ந்தறியேனென்ற கன்னிப் பொதுமகள் இரண்டு திங்களுக்குள் ஆண் மகவு பெற்றாள். ழுஇவ்வாறு இரண்டு திங்களுக்குள் பிள்ளை பெறுதல் புதுமையிலும் புதுமை. இதன் காரணம் என்ன? என்றேன். `முற்பிறப்பில் உம்மைத் தழுவி இச் சேயைக் கருவுற்று எட்டு மாதத்தில் இறந்தேன். இறக்கும்போது உம்மையே மறுப்பிறப்பிலும் இந்தக் கருவுற்ற நிலையோடு கூடவேண்டுமென்று கடுந்தவம் புரிந்தேன். அத் தவப்பயனால் முன்னைக் குறைவுற்ற இரண்டு திங்களும் நிறைவுற்றதும் மகப்பெற்றேன் தலைவ,ழு என்றாள். |
| தனையன்-மகன். புதுமை-வியப்பு. சேய்-பிள்ளை. மதி-மாதம். உம்மை-முற்பிறப்பு. |
| 30 |
| தாய்க்கிழவிப் பேய்தடுத்தாள் தன் மகளும் ஆங்கிலளே |
507 | சிலர்மயில்வீ டுற்றனரென் றறிந்துண்மை யறியவங்குச் செல்லுங் காலை புலனிழந்து நூறாண்டுங் கடந்தகூ னுடன்மாமி பூபா மாரன் மலர்வாளி விடுத்தனன்சே ரெனையென்ன நெருங்கிவழி மறித்தா ளப்பேய் கலவிதனக் கஞ்சிமீண் டோடினே னவள்சுதையைக் கண்டி லேனே. |
|
| சிலர் மயில்போலும் சாயலையுடைய பொதுமகள் வீட்டுக்குச் சென்றனரென்று கேள்விப்பட்டு, உண்மை யறிய அங்கு விரைந்து சென்றேன். பொறிபுலன் நன்றாய்த் தொழிற்பட முடியாது ஆற்றலற்று ஆண்டு நூறுங் கடந்து உடல் கூனி `தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றிழு நடந்துவரும் தாய்க் கிழவியாகிய மாமி என்னை வழிமறித்து, `அரசே! என்மேல் காமன் பூங்கணை பொழிந்தனன். நீர் என்னைச் சேர்தல் வேண்டும்,ழு என்றாள். அப்பேயுடன் கூட அஞ்சி மீண்டு ஓடினேன். வீட்டில் அவள் மகளைக் கண்டிலேன். |
| கலவி-கூட்டம். சுதை-மகள். |
| 31 |