| நீதி நூல் |
| பொருளீவோர் ஈயார்மேல் கீழ்ச்சாதி பொதுமகட்கு |
508 | கைத்தனநா மிழந்தபின்கூன் முடவரந் தகர்நோயர் கடைக்கு லத்தர் நித்தமரு விடவுள்ள முவந்தமின்னை நோக்கியிது நெறியோ வென்றேம் அத்தமதிற் குருடூனஞ் சாதியிழி வுளதோவஃ தளிப்போர் மேலோர் இத்தரையி லெனக்கீயார் கீழ்க்குலத்தர் சாதியிவை யிரண்டென் றாளே. |
|
| கைப்பொருள் முற்றும் அற்றபின், பொதுமகளாம் மின் போலும் தையலை நோக்கிப், `பெண்ணே! கூனர் முடவர் குருடர் நோயர் இழிகுலத்தோர் முதலியவர்களை நாளும் உள்ளம் உவந்து கூடுதல் முறையோ?ழு என்றேன். `அவர் பொருளில் குருடு உறுப்புக்குறை இனத்தாழ்வு முதலிய குற்றம் உளதோ? இல்லையன்றே. அப்பொருள் அளிப்பார் யாராயினும் அவர் மேலோரே. இவ்வுலகில் எனக்குப் பொருள் ஈயார் கீழோரேயாவர். இவ்விரண்டே இனம்,ழு என்றாள். |
| கைத்தனம்-கைப்பொருள். அந்தகர்-குருடர். இனம்-சாதி. |
| 32 |
| அளவிலா நோயை அளிப்பள் பொதுமகள் |
509 | கனைகடல்ம ணலையெணினும் வேசியர்சே ராடவர்க்கோர் கணித முண்டோ அனையநீ ரளவிடினு மவருட்கொள் சுக்கிலத்துக் கத்துண் டோவவ் வினையவர்மெய் யுரோமத்தை யெண்ணினுநோய்த் திரளெண்ண விதான முண்டோ யினையவரைச் சேர்தல்பெருந் தீயினிடை மூழ்குதலை யேய்க்கு மாதோ. |
|
| கடற்கரையின் நுண்ணிய மணலை எண்ணினும் பொதுமகளிரால் சேரப்படும் ஆடவரை எண்ணல் முடியாது. அவர் உடல்மேல் காணும் மயிரை அளவிட்டாலும் அவரால் தம்மைச் |