| நீதி நூல் |
| செல்வ முழுவதும் கொள்ளை கொண்ட பொதுமகளைப் பார்த்துச், `செம்மைநிறம் பொருந்திய உதட்டமிழ்தம் தருவாயாகழு என்றேன். அவள் தன் பெருவாய் எச்சிலை உமிழ்ந்தாள். `சிறிது உரையாடுகழு என்றேன். திட்டிப் பழித்தாள். `ஒருகால் தழுவுகழு என்றேன். காலால் உதைத்துக் கையாலிடித்துப் பல்லாற் கடித்துப் பருவரல் செய்தாள். |
| திரு-செல்வம். தேன்-அமிழ்து. உதைக்குபு-உதைத்து. |
| 45 |
| பொதுமகட்குக் குலதெய்வம் பொன்னளிப் போரே |
512 | தரணியின்மிக் கெழின்மாதை யுனதுகுல தெய்வமெது சாற்றா யென்றேன் இரணியனென் றெய்வமென்றாள் விட்டுணுவோர் நரசிம்ம மெனவே வந்தான் முரணுறவொண் ணாதென்றே னிரணியா சுரனன்று முராரி மெய்மேற் கிரணவுடை யெனைப்புனைந்த விரணியனென் றெய்வமென்றாள் கிளியன் னாளே. |
|
| உலகில் மிக்க அழகு வாய்ந்த கிளிபோன்ற பொதுமகளைப் பார்த்து, `உன் குலதெய்வம் எது? சொல்ழு என்றேன். `இரணியன் என் தெய்வம்ழு என்றாள். `இரணியனை அடக்கத் திருமால் ஆளரியாக வந்தான். அதனால், உன் தெய்வம் வலியுடையதாகா,ழு தென்றேன். அவள், `யான் கூறியது இரணிய அசுரன் அன்று. திருமால் மேனியின்கண் காணப்படும் ஒளிமிக்க பொன் ஆடையை ஒத்த பொன்னணி என்மேற் புனைந்த பொன்னுடையானே என் தெய்வம்ழு என்றாள். |
| தரணி-உலகம். இரணியன்-ஓர் அசுரன். முராரி-திருமால். இரணியன்-பொன்னுடையோன். |
| 36 |
| பொதுமகட்காகக் களவுசெய்யப் போயினவே இருகையும் |
513 | பொய்யேந்து மனவேசைக் காத்திருடிக் கையிரண்டும் போக்கிக் கொண்டே மையேந்து விழிமனையாட் கிடையேந்துந் துகிலின்றி மானந் தன்னைக் |
|