| கணிகையரியல்பு |
| கையேந்து மிரக்கவோ கையிலா ளானாளெக் கையை யேந்திச் செய்யேந்து முலகத்திற் பலியேந்தி யுண்ணுவமியாஞ் செப்பாய் நெஞ்சே. |
|
| உள்ளமே! பொய்யே சுமந்த மனமுடைய பொதுமகட்குப் பொருள் வேண்டிக் களவு செய்தோம். அதனால் இருகையும் போக்கப் பெற்றேம். மை தீட்டப்பட்ட கண்ணையுடைய மனைவி இடையிற் கட்ட உடையின்றித் தன் கையால் மானம் மறைத்து அகமொடுங்கி அல்லற்படுகின்றாள் அவள் பொருட்டு வயல்சூழ் உலகில் ஆடையிரக்கவும், இருவர் பொருட்டும் சோறு இரக்கவும் நமக்கோ கையில்லை. என் செய்வோம் சொல்லுவாயாக. |
| துகில்-ஆடை. பலி-பிச்சை. |
| 37 |
| வேடிக்கைக் குரல்விலங்காய் மெய்ப்பண்பாய் மாறினரே |
514 | சேயிழையின் சேடியர்முன் னெமக்கிதஞ்செய் வான்புலிவெஞ் சினமா கோகு நாயோரி கரடியெனக் கத்திமகிழ் விப்பர்கள்நா நலிந்த பின்னத் தீயவிலங் கினச்செய்கை நங்கண்ணே செயத்தொடுத்தார் திருவை யொப்பா ளாயமிரு கங்கட்கோ ரரசானா ளவட்கிரைநா மாயி னோமே. |
|
| மனமே! அழகிய அணியணிந்த பொதுமகளின் தோழியர் நாம் செல்வமுள்ளவராயிருந்த காலத்து நம்மை மகிழ்செய்வித்தற் பொருட்டுப், புலி, குதிரை, கழுதை, நாய், நரி, கரடி முதலிய விலங்குகள் போன்று ஒலி செய்வர். அவர்களே செல்வம் நீங்கி வறுமையுற்ற இக்காலத்து உண்மையாக அவ்விலங்குகளாக மாறித் தீய செயல்கள் பலவும் நம்மாட்டுச் செய்யலானார். அவள் தலைவியும் விலங்கரசாம் அரியாகி நம்மைத் தன் இரையாக்கினள். |
| சேடியர்-தோழியர். மா-குதிரை. கோகு-கழுதை. ஓரி-நரி. விலங்கரசு-அரி; சிம்மம். இரை-விலங்குணவு. |
| 38 |