| நீதி நூல் |
| கன்னத்தில் கண்டவுரு நின்உருவே கள்வனன்று |
515 | வண்ணமல ரமளியின்மே லிருக்கையிலோர் பரபுருடன் வரவு நோக்கிப் பண்ணமரு மொழிமின்னாள் விளையாடல் போற்றன்கைப் பதுமத் தாலென் கண்ணதனை மூடிவிட்டே னெனநகைத்தாள் வேற்றாளார் கள்ளீ யென்றேன் கண்ணடிபோற் றிகழுமென்றன் கபோலமதி லுன்னுருவைக் கண்டா யென்றாள். |
|
| நிறமும் மணமும் அழகும் நிரம்பிய பூப்பரப்பிய கட்டிலின்மேல் இருவரும் ஒன்றாய் இருந்தோம். அப்பொழுது அயலான் ஒருவன் வரக்கண்டதும், அப்பொதுமகள்-பண்ணமைந்த இனிய சொல்லையுடையாள் விளையாட்டுப்போல் என் கண்ணை அவள் தாமரைபோன்ற கையினால் பொத்தித் தான் என் கண்ணை மூடிவிட்டதாகச் சொல்லி நகைசெய்தாள். யான் சினங்கொண்டு `கள்ளீ! வந்த வேற்றாள் யார்? என வினவினேன். அவள் நாணமும் துன்பமும் கொண்டவள்போல் நடித்துக் கண்ணாடிபோல் விளங்கும் தன்னுடைய கன்னத்தில் என்னுடைய உருவம் தோன்றிற்று என்றும், அதனை யான் கண்டேன் என்றும் கூறி மயக்கினாள். |
| வண்ணம்-நிறம். அமளி-கட்டில். பரபுருடன்-அயலான். பதுமம்-தாமரை. கபோலம்-கன்னம். |
| 31 |
| கரவில்வந்தான் தனைக்கொன்றேன் கண்டேன் என்மகன் என்றே |
516 | இரவினிலென் னுடன்துயின்ற கோதையடிக் கடிவெளியே யேகி மீண்டாள் கரவறிவான் பின்றொடர்ந்தேன் கொல்லையிலே காளையொடுங் கலந்து நின்றாள் அரவமெனச் சீறியவ்வாள் மேல்வீழ்ந்து தாக்கவுயி ரற்று வீழ்ந்த உருவையுற்றுப் பார்க்கவென்ற னொருசேயென் றறிந்துநெஞ்ச முருகி னேனே. |
|