| விலங்கினத்துக் கிடர் செய்யாமை |
| இரவு என் உடன் உறங்கிய பொதுமகள் அடுத்து அடுத்து வெளியிற் போய்த் திரும்பினாள். அவ்வாறு அவள் சென்று மீளும் மறைவை அறிவதற்காகப் பின் தொடர்ந்தேன். தோட்டத்தில் ஒரு கட்டிளைஞனுடன் கலந்து மகிழ்ந்திருந்தனள். இதைக் கண்டதும் யான் பாம்பெனச் சீறி அந்த ஆள்மேல் வீழ்ந்து சண்டையிட்டேன். சண்டையில் அந்த ஆள் மாண்டு விழுந்தான். உற்றுப் பார்த்தேன். மாண்டவன் என்னுடைய ஒரே மகன் என்று கண்டேன். மிகவும் மனம் வருந்தினேன். |
| கரவு-மறைவு. காளை-இளைஞன்; வாலிபன். தாக்கல்-சண்டையிடல். சேய்-மகன். |
| 40 |
| அதி. 44--விலங்கினத்துக் கிடர் செய்யாமை |
| உயிரும் உணர்வும் உள்ளமும் விலங்கிற்கும் உண்டு |
517 | விலங்கினங் கட்கு வாக்கும் வினையுணர் ஞானத் தோடு நலங்களு மிலையென் றாலும் நரரைப்போற் சீவன் மெய்யைம் புலன்களும் இன்ப துன்பப் புணர்ப்பறி நெஞ்சி னோடுந் துலங்கிடும் விலங்கை வாட்டித் துயர்செய்வோர் நரகத் தாழ்வார். |
|
| விலங்கு முதலிய சிற்றுயிர்கட்குத் தங் கருத்தை உணர்த்தும் மொழியும் நலம் பொலம் பகுத்துணரும் உணர்வும் ஏனை நன்மைகளும் மக்களைப்போல் இல்லை யென்றாலும், உயிரும் உடலும், மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்புலன்களும் இன்ப துன்பம் உணரும் உள்ளமும் விளக்கமுற அமைந்துள்ளன. அப்படிப்பட்ட விலங்கினங்களைத் துன்புறுத்தி வருத்துவோர் மீளா நரகத்து ஆழ்வர். |
| வாக்கு-மொழி. நரர்-மக்கள் |
| 1 |