| அதி. 3. அரசியல்பு |
| துன்பம் நீக்கி இன்பம் ஆக்குவோன் மன்னன் |
37 | எந்த வே ளையினும் நொந்தவர் துயர்கேட் டிடரிழைப் பவன்றன தேக மைந்தனே யெனினும் வதைத்திட ஒல்கான் மாக்களின் சுகநல மன்றிச் சிந்தனை மற்றோர் பொருளினில் செலுத்தான் தீமொழி கனவிலும் புகலான் தந்தைபோல் தாய்போல் எவரையும் ஓம்புந் தன்மைய னேயிறை யன்றோ. |
|
| குடிகளுக்குத் துன்பஞ் செய்வோன் தன் ஒருமகனாக விருப்பினும் தண்டிப்பவனும், குடிகள் நலமே எண்ணுபவனும் கடுமொழியில்லாதவனும், தந்தைதாய்போல் பேணுபவனும் மன்னனாவான். |
| ஓம்பல்-பேணல். |
| 1 |
| மன்னுயிர் எல்லாம் தன்னுயிரா மதிப்போன் மன்னன் |
38 | மன்னுயி ரனைத்துந் தன்னுயி ரென்ன மகிழ்வொடு தாங்கியா ரேனும் இன்னலுற் றயர்ந்தோ மெனக்கலுழ்ந் திடில்தன் இருவிழி நீரினை உகுப்பான் அன்னவெந் துயரை நீக்குமுன் தானொன்று அயின்றிடான் துயின்றிடான் எவரும் நன்னக ரெங்கும் உளனெனப் பகர நாடொறும் இயங்குவோன் கோனே.. |
|
| எல்லா உயிரும் தன் உயிர்போல் காத்துப், பிறர் துன்பம் கண்டால் கண்ணீர்விட்டு, அத்துன்பம் நீக்கும் வரை ஊண் உறக்கமின்றி நகரெங்கும் காணும்படி வருவோன் மன்னன். |
| இன்னல்-துன்பம். அயின்றிடல்-உண்டல். |
| 2 |