| நீதி நூல் |
| யாராவது வெகுள்வாரானால் , அதற்குக் காரணம் அவர்கள் அறமுறையை விரும்பாமையாகும். அது பெரும்பாலும் தீமைக்கே துணையாம். இருளை விரும்பி அதற்கு மாறாகிய வெண்மையான வான்ஊர் திங்களை, இனிய ஆன்பாலை, ஒளிசேர் வெள்ளியை, தூய வெள்ளாடையை, கண்ணைப்பறிக்கும் வயிரத்தை, தண்ணென இருக்கும் முத்தை வெண்மையென்று வெறுத்துப் பழிப்பதுபோல் ஆகும். |
| கவி-சூழ். மாந்தர்-மக்கள். வெண்கவி-வெள்ளைப்பாட்டு; எளிதில் விளங்கும் பாட்டு. படாம்-ஆடை. கவுரம்-வெண்மை. |
| 2 |
| மாசகற்றி மாண்புறுத்தல் மதியுடையார் மாண்பே |
539 | வழுவொழித் தாளன் மேலோர் வழக்கென லாலிந் நூலைத் தழுவுமி னெனவன் னோரைத் தாழ்ந்திடன் மிகைகீ ழோரைத் தொழுதிரப் பினுமா சொன்றே தூற்றுவ ரவரை வாளா அழுதிரத் தலிற்பே றில்லை யாதலின் மௌன நன்றால். |
|
| `ஆன்றவிந்து அடங்கிய சான்றோர்ழு பிறர் நூற் குற்றம் போக்கிப் பெருமைப்படுத்திக் கைக்கொள்வது இயல்பு. ஆதலால், அவர்களிடம் இந்நூலை ஆதரியுங்கள் என்று வேண்டிக் கொள்ளுதல் குற்றமாகும். குற்றமே தூற்றும் சிற்றினத்தாராகிய கீழோரிடம் தொழுதும் அழுதும் இரப்பதாற் பயன் ஒன்றும் இன்று. ஆதலின், அவரிடம் சிவனே என்று, இருப்பது சிறப்பு. |
| வழு-குற்றம். வழக்கு-இயல்பு. மிகை-குற்றம். மாசு-குற்றம். பேறு-பயன். மௌனம்-வாய்பேசாமை; சிவனே என்றிருத்தல். |
| 3 |
| நூற்பொருள் வைப்பால் விழுப்பொருள் நுகர்வர் |
540 | தான்கண்ட நிட்சே பத்தைத் தமர்க்கெலாம் அறிவிப் பான்போல் வான்கண்ட இங்கி லீயம் மருவுபல் நூற்பூ மிக்குள் யான்கண்ட நிட்சே பத்தை யாவரும் தெரிவான் செய்தேன் தேன்கண்ட இந்நூ லீட்டல் செய்குவார் உய்கு வாரே. |
|