பக்கம் எண் :

267

  தெய்வமுண்டெனல்
 
  புதையலைக் கண்டவன் தன்னைச்சார்ந்தார்க்கு எல்லாம் அறிவிப்பன், அதுபோல், யான் உலகில் செந்தமிழ்ச் செழுநூல் பலவற்றினும், ஆங்கில நூலினும் கண்ட உண்மைப் புதையலை எல்லாரும் உணரும்படி எளிதாகச் செய்தேன.் அத்தகைய இனிய இந்நூலைக் கற்று ஒழுகுபவர் நன்னெறிச் சென்று இன்புற்று ஈடேறுவர்.
  இங்கிலீயம்-ஆங்கில நூல். நிட்சேபம்-புதையல். தேன்-இனிமை. ஈட்டல்-கற்றல். உய்குவார்-ஈடேறுவர்.
 

4

  அதி. 1--தெய்வமுண்டெனல்
  கற்றார் உற்றுரை கைக்கொளல் கடமை
541
நீள்வியன் உலக மெங்கும் நிகழ்வன பலவும் பாரார்
கேள்வியின் அறிவார் கற்ற கேள்வியுங் கேள்வி யன்றோ
ஆள்வினை யுடையா னுண்டென் றருமதம் யாவும் கூறும்
கோள்வினை கோளு றாரைக் கோள்வினை கோளு றுங்காண்.
  பரந்த உலகம் எங்கும் நிகழும் செய்திகளை நேரிற் காணாதவரும் செய்தித்தாள் வழியாகக் கற்றுணர்ந்து நம்புகின்றனர். நூல் வழியாகக் கற்கும் கல்வியும் ஒருவகைக் கேள்வியேயாகும். உலகு உயிர் அனைத்தையும் அருளுடன் ஆளும் ஆண்டவனாகிய உடையான் ஒருவன் உண்டென்று எல்லா நெறியினரும் நூல் வாயிலாக நுவல்கின்றனர். அவ்வாய்மைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர் தீமைக்கு அஞ்சார், ஏற்றுக்கொள்ளாமையே தீமையாகும். ஆதலின், அவர்களைத் துன்பங்கள் பொருந்தி மீளா.
  வியன் உலகம்-பரந்த உலகம். கேள்வி-கல்வி. கோள்வினை-கைக்கொள்ளும் உறுதி. கோளுறார்-ஏற்றுக்கொள்ளார். கோள்வினை-துன்பங்கள். கோளுறும்-துன்புறுத்தும்.
 

1

  கடவுளில் லென்போர் இல்லா ராகியே கழிவர்
542
இவரிய தருவைக் கைவிட் டிகழ்ந்துகீழ் வீழ்வார் போலும்
இவவுறத் தந்தாய் வந்தி யென்பவர் போலும் பைங்கூழ்
அவனியை நீத்தல் போலும் அகிலமாள் கோவைத் தேவைத்
தவநிதி யினையின் றென்போர் தாமுமே யிலரா வாரே.