பக்கம் எண் :

268

  நீதி நூல்
 
  கால்மிதியும் கைப்பிடியுமாகப் பெருமரத்தின் ழுநுனிக்கொம்பர் ஏறினவன்ழு அம்மரத்தினை இகழின் கீழே வீழ்ந்து மாளுவன். அதுபோலவும் தன்னைப்பெற்ற தாய் மகப்பேறற்ற மலடி எனச் சிறிதும் உட்கும் நாணும் இன்றி உரைப்பார் போலவும், தன் வளமுறு வாழ்வுக்கு நிலைக்களமான நிலத்தை நீங்கும் நெற்பயிர் போலவும், முறையே தாழ்வெய்தல், மெய்மறுத்தல், பயனிழத்தல், ஆகிய பரிவு எய்தி வருந்துவர்; யாவரென்றால், அனைத்துலகும் உடலும் உண்பொருளும் படைத்தருளிக் காக்கும் முழுமுதற் பெரும்பொருளை இல்லையென்று நல்லார்முன் நாணாதுரைக்கும் நயமிலிகள். அம்மட்டோ! ழுசெய்ந்நன்றி கோறலாம்ழு தீமையால் அவரும் இலராவர்.
  இவர்தல்-ஏறுதல். தரு-மரம். வந்தி-மலடி. பைங்கூழ்-நெற்பயிர். தவநிதி-கடவுள்.
 

2

  அதி. 2--தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
  கண்முதல் உறுப்பெலாம் தந்தவன் கடவுள்
543
அண்டபே ரண்ட மெல்லா மளந்தறி விழியுங் கந்தங்
கொண்டறி மூக்கு மோசை கொழுசுஞ்வை பரிச மெல்லாங்
கண்டறி செவிநா மெய்யுங் கழறுமைம் புலன்கட் கேன்ற
பண்டமென் பனவ னைத்தும் பண்ணியோன் திண்ணி யோனே.
  முட்டை வடிவாகத்தோன்றும் அளவில்லாத அண்டங்களின் இயல்பனைத்தும் கருவிகொண்டு அளவிட்டறியும் ஆற்றல் வாய்ந்த கண்ணும், மறைப்பினும் உள்ளவாறு பொருட்டன்மையை மணத்தின் வழி உணரும் மூக்கும், ஓசை யுணரும் செவியும், சுவையுணரும் நாக்கும், ஊறு உணரும் மெய்யும் என்று சொல்லப்படுகின்ற ஐம்புலன் நுகர்ச்சிக்கு வேண்டும் பொருள்களனைத்தும் படைத்தருளின பழம்பொருள் தானே விளங்கும் அறிவாற்றல் அன்பின் திண்மையுடையது.
  ஊறு-தொட்டாலுணர்வது; பரிசம். கழறும்-சொல்லுகின்ற.
 

1

  உலகுடல் உறுப்புழைப்பு உதவினோன் கடவுள்
544
மன்னுயிர்க் கிசைந்த பூத வகைகளு மவைக் கிசைந்த
கொன்னுட லமுமவ் வங்கங் குனிந்திட நிமிரச் செல்லத்
துன்னுபு தங்க வோடத் தொழில்பல இயற்றத் தக்க
தென்னுறுப் புகளுஞ் செய்தோன் தேவனோ யாவ னேயோ.