| தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| அழிவில்லாத உயிர்கள் அருள்பெற்றுய்ந்து வாழ்தற்பொருட்டுப் பொருத்தமான ஐம்பூதமும், அவற்றின் தொடர்பான வலிவுள்ள உடலும், குனியவும் நிமிரவும், செல்லவும் தங்கவும், ஓடவும் உழைக்கவும், வாய்ப்பான அழகிய உறுப்புகளும் படைத்தருளினவன் எல்லா வாற்றலும் இயல்பாகவே வாய்ந்த இறைவனே ஆவன். |
| மன்-நிலைபேறு; அழிவின்மை. பூதம்-பருப்பொருள். ஐம்பூதம்-நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்பன. தென்-அழகு. |
| 2 |
| என்றும் புதிதாய் உலகியற்றினோன் கடவுள் |
545 | என்றுமே பழைமை யெய்தா திலகுல கமும்யா வுள்ளும் துன்றிய தழலும் யாங்கண் தோண்டினு மூறு நீரும் ஒன்றினை யசைக்கின் மேவு முலவையுங் குலவி யெங்கும் நின்றவந் தரமுந் தந்த நிராமயற் கெவன்கைம் மாறே. |
|
| பல காலங்கள் செல்லினும் பழைமை எய்தாமல் புதுமையாகவே விளங்கும் உலகமும், எல்லாப் பொருள்களுள்ளும் செறிந்திருக்கும் தீயும், தோண்டிய இடங்களில் வற்றாது ஊறும் நீரும், ஒரு பொருளை அசைத்த காலத்து வெளிப்படுங் காற்றும், இவற்றுக்கெல்லாம் இடங்கொடுத்துக் கொண்டிருக்கும் வானமும் அருளால் அளித்துக் காக்கும் மலமகன்ற முழுமுதற்குச் செய்யும் கைம்மாறு என்ன வுள்ளது? அன்பால் அகங்குழைந்து அவனடி வாழ்த்தி இடையறாது நினைத்து அருள்வழியில் நிற்றலே உள்ளதென்பது குறிப்பு. |
| இலகல்-விளங்கல். துன்றிய-செறிந்த; உள்ளடங்கிய. உலவை-காற்று. அந்தரம்-வானம். நிராமயன்-மனமில்லாதவன். கைம்மாறு-ஈடு. |
| 3 |
| உயிர்கனி காய்காலம் உதவினோன் கடவுள் |
546 | வேறுவே றான சீவ விகற்பமு நிறம்பல் வாய்ந்து நாறுபூ இலைகா யார்ந்த நளிர்தரு வினமுங் குன்றும் ஊறுநீர்த் தொகையுஞ் சீவ ருய்ந்திடக் கார்முன் னாக மாறுகா லப்ப குப்பும் வகுப்பவன் சகப்பி ரானால். |
|
| பல்வேறுவகையான அளவிலா உயிர்க்கிழவராகிய ஆன்மாக்களும், அவை உய்யப் பல நிறம் வாய்ந்த மணமுள்ள பூ இலை காய் கனி உதவும் நெருங்கிய பல பயன்மரங்களும், வானளாவிய வள |