| நீதி நூல் |
| மிக்க மலைகளும், நீர்நிலைகளும், கார்கால முதலாக மாறி மாறி வரும் அறுவகைப் பருவங்களும், அமைத்து அருளினவன் உலக முதல்வன். |
| சீவவிகற்பம்-உயிர்வகை. தரு-பயன்மரம். அறுவகைப்பருவம்-கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன. இவற்றுற்குரிய மாதங்கள் முறையே ஆவணி முதலாக இவ்விரண்டாகும். சகம்-உலகம். பிரான்-முதல்வன். |
| 4 |
| ஒன்பான் துளையுடலில் உயிர்நிறுத்தோன் கடவுள் |
547 | காற்றினைப் பலது வாரக் கடத்தினு ளடைத்தல் போல ஏற்றிடு நவது வாரம் எண்ணிலா மயிர்த்து வாரம் தோற்றிய சடக்க டத்துள் துன்னுயிர்க் காற்ற டைத்து நாற்றிசை மிசைப்பல் லாண்டு நடத்துவோன் திடத்தி னானே. |
|
| பல துளையுள்ள குடத்தினுள் காற்றினையடைத்துத் தங்க வைப்பதுபோன்று, ஒன்பது பெருந்துளையும் அளவில்லாத மயிர்த்துளையும் பொருந்திய அறிவில் உடலகத்துச் சார்ந்ததன் தன்மையாகக் கலந்திருக்கும் இயல்புவாய்ந்த உயிர்க்காற்றை யடைத்துப் பல்லாண்டுகளாக நாற்புலத்தும் நலம்பெற நடத்திவைத்தருள்வோன் முழுவலி படைத்த முதல்வனாவன். |
| பல துவாரம்-பல துளை. கடம்-குடம். சடம்-அறிவில்லது. நாற்றிசை-நாற்புலம்; கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு. |
| 5 |
| என்பு இறைச்சி குருதியுடல் இயற்றினோன் கடவுள் |
548 | கொன்புலாற் சுவரை நீராங் குருதிதோய்த் தெழீஇச் சுவேத என்பெனுங் கழிப ரப்பி யிரச்சமா நரம்பால் வீக்கி ஒன்பது வாயில் விட்டிங் குரியெனுங் கூரை வேய்ந்து மன்பெற வீடொன் றான்மா மன்பெற விசைத்தான் மன்னோ. |
|
| முழுமுதல் தலைவன் வலிமைமிக்க இறைச்சியென்னும் மண்ணைக் குருதியாகிய நீரால் குழைத்து எழுப்பி வெண்மையான எலும்பென்னும் கழிகளைப் பரப்பி நரம்பாகிய கயிற்றால் கட்டி |