| தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| பார்-உலகம். சோதி-ஒளி. தினம்-நாள். புரண்டு-உருண்டு. சுழன்று-சுற்றி. தாள்-திருவடி. தலையுறல்-இரண்டறக் கலத்தல். |
| 10 |
| வளப்பமொடு மென்மை வன்மை நிலம் வகுத்தோன் கடவுள் |
553 | தருவின்வேர் பயிர்வேருட்சென் றுலாவமென் மையதாய்த் தங்கும் இருமலை சீவ ரில்லம் யாவுமுள் ளழுந்தா வண்ணம் ஒருவில்வன் மையதா யெண்ணி லாண்டொழி யினும்வளப்ப மருவுபு பலன ளிக்கும் வையமை யன்செய் தானால். |
|
| நிலம், பெருமரங்கள் சிறிய செடி கொடிகள் முதலியவற்றின் வேர்கள் தன்னகத்து எளிதாகப் புகுந்து நிலைத்து நிற்கும்படி மென்மையாகவும், வானளாவிய பெரிய மலைகளும், பல்வேறு உயிரினங்களும், வீடுகளும் தன் மேற்புறத்து உள் அமிழ்ந்து விடாது நிலைத்திருக்கத்தக்க வன்மையாகவும், அளவில் காலமாயினும் மேலும் மேலும் விளைபயன் தரக்கூடியதாகவும், இருக்கின்றது. அத்தகைய வாய்ப்புடன் அந் நிலத்தைப் படைத்தவன் தனக்குவமையில்லாத் தலைவன் ஆவன். |
| தரு-மரம். மென்மை-இளக்கம். இரு-பெரிய. எண்ணில்-அளவில்லாத. |
| 11 |
| கரைதாங்க லின்றிமழை கடல்தந்தோன் கடவுள் |
554 | நீரினைக் கலங்க ளின்றி நிறுத்தல்போ னீர்தி ரண்ட காரினைக் கீழ்வி ழாது ககனத்தி னிறுவி நொய்ய மாரியே பெய்யச் செய்து மறித்திடு கரையொன் றின்றி வாரியை நிறுத்து மின்ப வாரியைச் சாராய் நெஞ்சே. |
|
| தண்ணீரை ஏனம் ஏதும் இன்றி வெறுவெளியில் நிறுத்துவதுபோல் நீர் நிறைந்த மேகத்தை ஒருமிக்கக் கீழ் விழாதபடி வானத்தின்கண் நிறுத்திச் சிறு சிறு துளியாகப் பெய்யச் செய்வதும், ஆழ நீளம் அகலம் அளவிடப்படாத கடலைக் கரையின்றி எல்லை கடவாது நிற்கச் செய்வதும் ஆகிய பேராற்றல் வாய்ந்த பெரும் பொருள் பேரின்பக் கடலாகிய ஆண்டவனே. மனமே! அவ் ஆண்டவனைச் `சார்தரும் நோய் சாராழு திருத்தற் பொருட்டு அன்புடன் மறவா நினைவுடன் உறவாய்ச் சார்வாயாக. |
| கலம்-ஏனம்; பாத்திரம். திரண்ட-நிறைந்த. ககனம்-வானம். நொய்ய-சிறிய. மாரி-மழை. வாரி-கடல். |
| 12 |
| நீ.-18 |