| | நீதி நூல் |
| | உயிர்வாழ் காற்றிங் குதவினோன் கடவுள் |
| 555 | மாதலஞ் சுழல லாலும் மாமதி சுழல லாலும் ஆதவன் கிரணத் தாலும் அந்தர மசைவுற் றாகும் ஊதலஃ தின்றேற் சீவ ருய்ந்திடார் பெருங்கால் மாக மீதமர் விடத்தை நீக்கும் வியந்திக்கால் தந்தோன் யாரே. |
|
| | பெரிய நிலவுருண்டை இடைவிடாது சுற்றுவதாலும், அழகிய திங்களும் அப்படியே சுற்றுவதாலும், ஞாயிற்றின் கதிர்களாலும் பெரிய அசைவு உண்டாகின்றது. அவ்வசைவினால் காற்றுண்டாகின்றது. அக் காற்று இல்வழி ஓர் அறிவு முதல் ஆறறிவு ஈறாகச் சொல்லப்படும் எல்லா உயிரினங்களும் வாழ்தல் முடியாது. விசும்பில் நிறைந்துள்ள வாலாமையாகிய நஞ்சினைப் போக்குவதும் அக்காற்றேயாம். உயிர்கள் வாழும்படி அப்பெருங்காற்றினை எல்லாரும் வியப்புறத் தந்தருளினோன் முழுமுதல்வனாவன். |
| | மாதலம்-பெரு நிலம். சுழலல்-சுற்றல். ஆதவன்-ஞாயிறு; கதிரவன். ஊதல்-காற்று. சீவர்-உயிர்கள். மாகம்-விசும்பு. கால்-காற்று. |
| | 13 |
| | இடிமின்னால் நஞ்சகற்றி மழையீந்தோன் கடவுள் |
| 556 | அகலிடத் திருந்து பன்னீ ராவியைப் பானு கையாற் ககனமீ தீர்க்கக் காராங் கடினத்தால் இடியாம் பல்கார் இகலொடு பொருத மின்னாம் இடித்தல்வான் விடம கற்றும் சகலமு முய்யப் பெய்யுஞ் சலதர மீந்தோன் யாரே. |
|
| | விரிந்த இடத்திலுள்ள நீர்நிலைகள் பலவற்றினின்று நீராவியை ஞாயிற்றின் கதிர்க் கையால் வானத்தில் இழுத்தவுடன் மழையாம். அது செறியச் செறிய ஒன்றோடொன்று மோதலால் இடியுமின்னலும் உண்டாகின்றன. இடியினால் வானத்திலுள்ள நச்சுக் காற்றுக்கள் அகலும். எல்லாவுயிர்களும் வாழும்படி மழைபெய்ய அருளுவோன் யாவன்? அவனே முழுமுதற் கடவுள். |
| | பானு-ஞாயிறு. விடம்-நஞ்சு. சலதரம்-முகில்; மழை. |
| | 14 |
| | தீயும் காற்றும் சீர்பெற அமைத்தோன் தேவன் |
| 557 | வாயுவல் விசையோ டெய்தின் மகியினோ டுயிர்கள் யாவும் வீயுமென் றக்கால் மெல்ல வீசச்செய் துலகெங் குஞ்சார் |
|