| | தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| | தேயுமே லெழுந்து நிற்கிற் செகமுய்யா தெனவத் தீயை வேயும்பல் பொருட்குள் வைத்து வேட்டவாறளிப்போன் யாரோ. |
|
| | காற்று கடுமையாக வீசினால் உலகத்தோடு உயிர்கள் எல்லாம் அழிவுபாடு எய்துமென்று அக் காற்றை மெல்லென வீசச் செய்தும், தீ மேலோங்கி நிற்குமானாலும் உலகம் அழிந்துபடும்; அங்ஙனம் தீ மேலோங்கவொட்டாது எல்லாப் பொருள்களிலும் அடங்கி நிற்குமாறு செய்து வேண்டும்போது வெளிப்படத்தந்தும் உதவுகின்றவன் யாவன்? அவனே கடவுளாவன். |
| | வாயு-காற்று. வல்விசை-கடுமை. தேயு-தீ. செகம்-உலகம். வேட்டவாறு-வேண்டிய அளவு. அளிப்போன்-உதவுவோன். |
| | 15 |
| | மனத்துக்கு வரம்பில் வலி வகுத்தோன் கடவுள் |
| 558 | ககனமண் சராச ரங்கள் கலைகளுன் னுள்ள டக்கிப் பகரொரு நொடிக்கு ளண்டப் பரப்பெலா முலாவித் துன்பஞ் சுகமற மறமோர்ந் தாவி தூங்கினுந் தூங்கா தோங்கி அகலுறு முன்னைச் செய்தோ னவன்கொன்மற் றெவன் கொனெஞ்சே. |
|
| | மனமே! விண்ணும், மண்ணும், இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களும், எல்லையில்லாத கலைகளும் உன்னகத்தடங்க நொடியளவுக்குள் பலகோடி அண்டங்களைச் சுற்றித் துன்பம், இன்பம், புண்ணியம், பாவம் இவற்றை ஆய்ந்து, உயிர் உறங்கினும் நீ உறங்காது எல்லா இடங்களையும் கடந்து வரும் ஆற்றலை உனக்குத் தந்தவன் யாவன்? அவனே கடவுள். |
| | சரம்-இயங்குதிணைப் பொருள். அசரம்-நிலைத்திணைப் பொருள். அறம்-புண்ணியம். மறம்-பாவம். அகலுறல்-கடத்தல். |
| | 16 |
| | மயிர்தோல் வலுவாய் வகுத்தோன் கடவுள் |
| 559 | அறிவிலா விலங்கு போர்வை யகஞ்செய வறியா தென்னச் செறிமயிர் பெருந்தோல் செய்து சீதவுட் டணநோய் தீர்த்தான் |
|