| | நீதி நூல் |
| | மறிகவ சங்க ளில்லம் வனைந்திட வறிந்த மாக்கள் பொறியுடல் களைமென் றோலாற் போர்த்தினோன் சீர்த்தி யோனே. |
|
| | பகுத்தறிவுப் பண்பாம் கருத்தில்லாத விலங்கு முதலிய சிற்றுயிர்கள் குளிர் தாங்கும் போர்வையும், பற்றிவாழும் குடிசையும் அமைத்துக் கொள்ளும் ஆற்றலற்றவை. ஆகவே அவற்றிற்கு மயிர் அடர்ந்த தோல் போர்வை அமைத்துத் தட்ப வெப்ப நோய் நீங்கி வாழத் துணைபுரிந்தனன். ஆறறிவு வாய்ந்த மக்கட்கு வேண்டுங் காலத்துப் போர்வை போர்த்து மாட மாளிகை யமைத்து மனைவி மக்கள் விருந்து சுற்றமுடன் வாழ்வதற்கேற்ற உடலுறுப்பு உணர்வுகளைஉதவினன். அத்தகையோனே சிறந்த கடவுளாவன். |
| | சீதம்-தட்பம். உட்டணம்-வெப்பம். கவசம்-போர்வை. இல்லம்-வீடு. சீர்த்தி-சிறப்பு. |
| | 17 |
| | உறுப்பினில் படைவலி உறுத்தினோன் கடவுள் |
| 560 | ஆயுதஞ் செய வறிந்த நரர்மெய்யி லாயு தங்கள் தோய்தரச் செய்யா னன்ன தொழிலிலா விலங்கின் பல்லிற் சாய்தரு முகிரின் மூக்கிற் றலையினிற் காலில் வாலில் ஏய்தரு படைக்க லங்க ளியற்றினோன் வயத்தி னோனே. |
|
| | தொழிற் கருவியும் படைக் கருவியும் தோமின்றிச் செய அறிந்த மக்கட்கு அவர்தம் உடம்பில் அரிமா போன்ற விலங்கினங்களுக்கு அமைத்தது போன்று கூரிய நகம், பல், கொம்பு, முதலிய ஏதும் அமைத்திலன். அச் சிற்றுயிர்களுக்குப் பல்லில் வளைவான நகங்களில், கூரிய மூக்கில், தலையில் கால்களில், வாலில் பொருத்தமான படைக் கலங்களை அமைத்தருளினன். அவனே தன்வயம் வாய்ந்த கடவுளாவன். |
| | ஆயுதம்-படைக்கலம். சாய்தரும்-வளையும். உகிர்-நகம். |
| | 18 |
| | சிற்றுயிர்க்கும் செய்தொழில் சேர்த்தோன் கடவுள் |
| 561 | உயிருயத் தகுமு பாய மொருவரை யொருவர் பார்த்துப் பயிலுவோ மியற்கை யாப்புள் பலவிலங் குரிய வூண்கண்டு |
|