பக்கம் எண் :

278

  நீதி நூல்
 
 

அகலா அறுகுணம் அமைந்தோன் கடவுள்

563
தனவயத் தாதன் மூலந்
    தானின்மை சடல மின்மை
இனநல மெல்லாங் கோட
    லெங்கணும் நிறைந்தி ருத்தல்
வனமுறு பொருள்யா விற்கும்
    வாய்ந்தகா ரணனே யாதல்
எனவறு குணத்தோ னெங்கும்
    இயலருள் மணத்தோ னெஞ்சே.
  மனமே! ழுவினையின் நீங்கி விளங்கியழு அறிவினால் தன்வயமுடையவனாவன்; தானே எல்லாவற்றிற்கும் காரணனன்றித் தனக்கோர் காரணனை இல்லாதவன்; தோற்றக்கேடு இல்லாத அருளே திருவுருவாய் ஆண்டாண்டு அடியவர்கட்கு வேண்டுவன அருளலால் மாயாவுருவினை ஏயாமாண்பினன்; அனைத்து நலமும் தினைத்துணையுங் குன்றாது அமையப் பெற்றவன்; எள்ளில் எண்ணெய்போல் எங்கும் பரம்பியுள்ளவன்; அழகுள்ள பொருள்கள் யாவற்றிற்கும் அவ்வழகிற்குக் காரணமானவன் என்னும் வியத்தகு பண்புகள் ஆறும் உடையவன். எங்கும் எல்லாவற்றையும் இயக்கும் திருவருளை மணந்த வரையா வாழ்வருள் வள்ளல்.
  தனவயம்-பிறர்க்கடிமையின்றித் தானே முதன்மையாயிருத்தல். மூலம்-காரணம். சடலம்-உடல்; திருவுரு. வனம்-அழகு.
 

21

 

பெண்ணும் பொன்னும்போற் கடவுளைப் பேணாதது என்னே?

564
மாதரை விழைந்தோ னென்றும்
    மாதரை நினைப்பன் பொன்மீ
தாதர முளோனப் பொன்னை
    யனுதின மோர்வன் ஈசன்
பாதமீ தன்பு ளேமற்
    பகலிர வினுமோ வாது
நாதனை யுன்னேங் கொன்னே
    நாள்கழித் திடலென் னெஞ்சே.