பக்கம் எண் :

279

  தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
 
  மனமே! கற்புநிறை பெண்ணை விரும்புவோன் கனவிலும் நனவிலும் அப்பெண்ணையே விருமபுவன். மின்னும் விளக்கமிக்க பொன்னை விரும்புவோன் நாடொறும் அப்பொன்னையே விரும்பி எண்ணுவன். அவைபோல், ஆண்டவன் திருவடியில் உண்மையான அன்புள்ளோமானால், எல்லையும் எல்லியும் வீணாகப் பயனின் முயற்சியி லீடுபட்டு நாட்போக்குதல் எதன்பொருட்டு?
  மாதர்-அழகிய பெண்கள். விழைவு-விருப்பம். ஆதரம்-விருப்பம். அனுதினம்-நாடொறும். பகல்-எல்லை. இரவு-எல்லி.
 

22

  துன்பந் தருதல் தூய்மைக் கென்ப
565
நலன்கள்யா வுறினுந் தந்த
   நாதனைத் துதிமோ நோய்நாங்
கலங்கவே யுறினுந் தந்தை
   காதலர்ச் சினவல் போற்பிற்
பலன்கணாம் பெறவத் துன்பம்
   பணித்தன னிறையென் றுன்னி
விலங்கிடா தவன்றாள் நெஞ்சே
   விரைவில்நீ பரவி யுய்யே.
  மனமே! பல்வேறு வகையான இன்ப நலங்களை எய்தும் பொழுதெல்லாம் அவற்றைத் தந்தருளிய முழுமுதல்வனை வழுத்துதல் வேண்டும். தவமிருந்து பெற்றுவளர்க்கும் தாய் தந்தையர் தம் சேய் நலத்தின் பொருட்டு அவர்களைச் சினந்து கொள்வர். அதுபோல், நாம் நற்பயன்பெற்று உய்தற்பொருட்டு இடையிடையே துன்பங்களை வினைக்கீடாக இறைவன் ஈந்தருள்வன். அத்துன்புக்கு வருந்தி ஆண்டவனை மறந்திடாது அவன் திருவடியை விரைந்து வழுத்தி வாழ்வாயாக.
  துதி-வழுத்து. நோய்-துன்பம். விலங்கிடாது-மறவாது. பரவி-வழுத்தி. உய்-வாழு.
 

23

  உடம்பகப் பொறியை உய்ப்போன் கடவுள்
566
நாமறி யாது யிர்ப்பு கணந்தொறு நடக்க மெய்யுள்
தோமறு மியந்தி ரங்கள் தொழில்பல வியற்ற வுண்ணுஞ்
சேமவூண் சீர ணித்துத் தேகமெங் கணுமு லாவக்
காமரா ருயிரைக் காக்குங் கடவுள்பால் நடவாய் நெஞ்சே.