28 |
|
| நீதிநூல் | | நெறிமுறை நடந்து நடத்துவோன் நீள்மன்னன் | 41 | தானினி தியற்று மனுநெறிப் படிமுன் றானடந் தறவழிகாட்டி ஞானநற் குணத்தின் மேன்மையா லெவர்க்கு நாயகந் தானெனத் தெரித்துத் தானமுந் தயையு மெய்ம்மையுந் தவமுந் தற்பரன் வணக்கமும் பொறையு மானமு மிகுத்து நரரெலாஞ் செழிக்க மகிழர சளிப்பவன் மன்னே. |
| | முறைதவிராமல் தான் நடந்து குடிகளையும் நடத்துவோன், நல் அறிவாலும் நற்பண்பாலும் எல்லாருக்குந் தலைவனாவோன், தானம், கண்ணோட்டம், மெய்ம்மை தவம் , தெய்வ வணக்கம், பொறுமை, மானம் முதலியன இயல்பாய் அமைந்து, மக்கள் எல்லாம் செழிப்புடன் மகிழ்வுற ஆள்வோன் வேந்தன். | | தயை-கண்ணோட்டம். | | 5 | | வாய்ப்பெல்லாம் இயற்றி ஆள்வோன் மன்னன் | 42 | சத்திரஞ்சோலை சாலைகள் குளங்க டண்ணதி மதகொடா லயங்கள் வித்தியாசாலை மாடகூ டங்கள் வேறுவே றமைத்துவே ளாண்மை சத்திய மகலா வாணிக மாதி சகலநற் றொழிலவ ரவர்கள் நித்திய முயல வித்திசை புரக்கு நிருபனே நிருபனா மன்றோ. |
| | ஊட்டுப்புரையும், பூங்காவும், சாலை, குளம், யாறு, மடை, கோவில், கல்லூரிகளும், மாடகூடங்களும் வெவ்வேறமைத்து வேளாண்மை, வாணிபம், கைத்தொழில் நாளும் பெருக வேண்டுவன செய்து காப்போன் வேந்தன். | | சத்திரம்-ஊட்டுப்புரை (தங்குமிடம்) புரத்தல்-காத்தல். நிருபன்-வேந்தன் | | 6 |
|
|
|
|