பக்கம் எண் :

29

  அரசியல்பு
 
  கடவுளை பன்முறை கேட்டு முறைசெயல் பண்பு
43
காதிறைவனுக்குக் கண்ணென லான்மெய் காண்குறா
   னெனுமொழி மாற்றி
வாதிகள் சாட்சி சாதக மெல்லாம் வகைவகை
   யினிதுகேட் டமைந்த
மேதினிக்கிழமை நீங்கிடுந் தன்மை விளையினு
   நடுவினீங் காது
பாதியா வணுவும் பகுந்துதீர்ப் பதுவே பார்த்திபன்
   கடமையா மன்றோ.
  ஒற்றர்மொழியன்றிப் பிறர்மொழியைக் கேட்டு உண்மை காணான் மன்னன் என்று உலகோர் சொல்லும் உரையை மாற்றி, வழக்காளியும் எதிர்வழக்காளியும் சான்று சொல்லுவோரும் கூறுவனவும், மற்றை ஆவணமாகிய எழுத்து முதலியவும் செவ்வையாகக் கேட்டும் ஆய்ந்தும் முறைசெய்தல் வேண்டும். அரசே தன்னை விட்டு நீங்குமாயினும் தான் நடுவுநிலைமையில் நீங்காது அணுவையும் பாதியாகப் பிளந்து நடுவுநிலை செய்யும் மன்னனே வேந்தன்.
 

7

  செங்கோல் ஒன்றே சேர்க்கும் வலியினை
44
மன்னவன் வலிசெங் கோலினா லன்றி
   வாளினாற் சேனையா லில்லை
நன்னெறி வழுவா மன்னவன் தனக்கு
   நாடெலாம் பேரர ணுலகின்
மன்னுயி ரெல்லா மவன்படை யன்னோர்
   மனமெலா மவனுறை பீடம்
இன்னதன் மையனா யரசளிப் பவனை
   இகல்செயுந் தெறுநரு முளரோ.
  வாளும் காலாளும் மன்னனுக்கு வலியும் வெற்றியும் தருவன அல்ல. அவன் செங்கோலே அவனுக்கு வலியாகும்; வெற்றியாகும். முறைதவிரா மன்னனுக்கு நாடெல்லாம் கோட்டை; குடிகளெல்லாம் படை; குடிகள் மனமெல்லாம் இருக்கை; இத்தகைய மன்னனுக்குப் பகைவரும் உண்டாவரோ? (உண்டாகார்.)
  பீடம்-இருக்கை. தெறுநர்-பகைவர்.
 

8