| நீதிநூல் |
| தன்னைத் தொண்டனாத் தருவோன் மன்னன் |
45 | கைப்புரை யேற்றுப் பொய்ப்புக ழேலாக் காதின னருள்பொழி கண்ணன் தப்புரை வழங்கா நாவினன் புவியோர் தாசன்றா னெனவுணர் மனத்தன் செப்பயன் மடவார் காணரு முரத்தன் றிருந்தலர் காணரும் புறத்தன் எப்பொழு தினுஞ் சென் றியாருங்காண் முகத்தன் ஈசனன் புடையவ னிறையே. |
|
| சான்றோர் கூறும் நல்வழிப்படுத்தும் கசப்புரையை உவந்து கேட்கும் காதினன.் பொய்ப்புகழ் அக்காதில் ஏறாது செய்பவன். அருள்நிறைந்த கண்ணையுடையவன். பொய்சொல்லா நாவினன். உலகோர்க்கு உவந்து செய்யும் அடிமை எனத் தன்னை நினைக்கும் மனத்தினன். அயன் மாதர் எண்ணம் அணுவுமில்லா நெஞ்சினன். பகைவர்க்குப் புறமுதுகு இடாதவன். எல்லார்க்கும் எப்பொழுதும் காட்சிக்கு இனியவன். கடவுள்மாட்டு நீங்காப் பேரன்புடையவன், அரசன். |
| புறம்-முதுகு. |
| 9 |
| கொடுங்கோ லரசன் அடுந்தன் உயிரும் |
46 | கொடியமன் னவர்க்குக் குடிகளே யொன்னார் கோட்டையே யமர்க்களம் அவர்தம் அடிகள்தோய் நிலமெங் கணும்படு குழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம் நெடியவா சனமே காசன மேடை நிமிருழை யோர்நமன் றூதர் கடிமனை மயானக் காடெனில் கொடுங்கோற் காரண ருய்யுமாறு உளதோ. |
|
| முறைதவறிய மன்னர்களுக்குக் குடிகளே பகைவர்; போர்முனையே கோட்டை; அவர்கள் நடக்கும் இடங்களெல்லாம் படுகுழி; உண்ணும் ஊண் நஞ்சு; இருக்கை கொலை மேடை; பணியாளர் கூற்றுவன் தூதுவர்; அரண்மனை சுடுகாடு. இந்நிலையிலுள்ள மன்னர்கள் ஒருகாலும் ஈடேறார்கள். |
| காசனம்-கொலை. |
| 10 |
| _____ |