| அதி. 4. குடிகளியல்பு |
| அரசின்றேல் உலக ஒழுக்கம் அழியும் |
47 | வேந்தனே யில்லா விடினுல கத்து மேலது கீழதா மணஞ்செய் காந்தனுக் கடங்கிக் களத்திரம் நடவாள் காதலர் தந்தைசொற் கேளார் மாந்தர்வே ளாண்மை முதற்றமக் குரிய வளமைகூர் தொழில்களின் முயலார் சாந்தருந் தீய ராவரேல் தீயர் தன்மையைச் சாற்றுமா றெவனோ.
|
|
| நாடும் மொழியும் நலமுறக் கூடிவாழ்வதே குடிகள் இயல்பு. செங்கோல் மன்னன் இல்லாவிட்டால், மேன்மை தாழ்வை அடையும்; குடும்பம் குலையும்; மக்கள் தந்தைசொற் பேணார்; உழவர் பயிர்த் தொழில் செய்யார்; அமைதியினரும் கொடியவராவர். |
| 1 |
| மன்னன் இன்றேல் குடிகள் மனைசெல்வம் இன்றி மாள்வர் |
48 | நம்மனை மைந்தர் கிரகவாழ் வெல்லாம் நரபதி யாலவ னிலனேல் அம்மனை தீயர் கைவச மாவள் அருநிதி கொள்ளையாம் நாளும் வெம்மையோ டொருவ ரொருவரை யுண்பார் மேலவர் அசடரான் மெலிவர் அம்மஈ தெல்லா முணர்ந்தர சாணைக் கமைதனற் குடிகளி னியல்பே.. |
|
| மனையாள் மக்கள் வாழ்வு எல்லாம் மன்னவனாலேயே நிலைக்கும். அவன் இல்லாவிட்டால் கற்பழிவும் கொள்ளையும் கொலையும், உயர்ந்தவரைத் தாழ்ந்தவர் துன்புறுத்தும் கொடுமையும் பெருகும். அதனால், அரசன் ஆணைக்கு அடங்கி நடப்பதே பெருமை. |
| 2 |