பக்கம் எண் :

32

  நீதிநூல்
 
  வேறு
  அடங்காக் குடிகள் வளங்குன்றி அழியும்
49
நதியினு முயர்பணை நந்துங் காருலாங்
கதியினு முயர்வரைத் தருக்கள் காயுமால்
பதியினு முயர்தடம் காப்பைஞ் ஞீலங்கள்
விதிசெயல் சிதைந்தக மெலிந்து நையுமே.
  (செங்கோல் மன்னன் இல்லாவிட்டால்) யாற்றினும் மிக்க நீர்வளமுள்ள வயல்களும் கெடும். மேகத்தை ஊடுருவிச் செல்லும் உயர்ந்த மலைமேலுள்ள மரங்களும் வாடும். ஊரினும் சிறந்த குளம் சோலை நீலமலர்கள் வாழ்க்கைமுறைகள் எல்லாம் வளங்குன்றி யழியும்.
  பணை-வயல், நந்தும்-கெடும், தருக்கள்-மரம், தடம்-குளம், கா-சோலை, ஞீலங்கள்-நீலமலர்கள்.
 

3

  உடலுக்குத் தலை போலும் உலகினுக் கரசன்
50
தரையெனு முடற்கொரு தலைவ னேதலை
நரர்பல வுறுப்புக ணலங்கொண் மெய்யது
சிரமுறும் பொறிவழிச் செல்லுந் தன்மைபோல்
உரவர சனுக்கமைந் தொழுகும் வையமே.
  உலகமாகிய உடலுக்கு மன்னனே தலை; மக்கள் (மெய் வாய் கண் மூக்கு செவி, கை கால் வாய் எருவாய் கருவாய் முதலிய) வுறுப்புக்கள். உடம்பு மூளைவழிச் செல்லும் தன்மைபோல் வலிமையுடைய அரசன் வழி உலகம் நடக்கும்.
  நரர்-மக்கள். உரன்-வலிமை.
 

4

  நயம்செய் மன்னவன் ஞாயிறு போல்வன்
51
பானுவெப் புடையவ னெனினும் பானுவே
வானில வானெனில் வைய முய்யுமோ
கோனருங் கொடியனே யெனினுங் கோனின்றி
மானவ ருய்யவோர் வழியு மில்லையே.