| குடிகளியல்பு |
| ஞாயிறு வெப்பமுடையவன். ஆனாலும், அவன் வானில் உலாவாவிட்டால் இருளகலாது; ஒளியுண்டாகாது; உயிர்கள் வாழ முடியாது. அதுபோல், மன்னனும் தீயோருக்குக் கொடியனே; அவன் இல்லாவிட்டால் நல்லவர் வாழ வேறு வழியின்று. |
| பானு-ஞாயிறு, மானவர்-நல்லவர். |
| 5 |
| வரிகொளல் மக்களை வாழ்வித் தற்கே |
52 | படியின்மன் னுயிர்க்கெலாம் பாது செய்கின்ற நெடியமா சேனையை நெறிசெய் மாந்தரைக் கடியொடுந் தாங்கவூர்க் காரி யஞ்செயக் குடியிறை யிறையவன் கொள்ளுங் கொள்கையே.. |
|
| மன்னவன் வரிவாங்குவது மக்களைக் காக்கும் படைகளுக்கும் அரசியல் அலுவல்களிலமர்ந்து நெறிமுறைசெய்யும் வேலையாட்களுக்கும், நாடு நகரங்களின் நலம் பெருகச் செய்யும் பணிகட்கும் செலவு செய்தற்கே. |
| படி-உலகம். மாந்தர்-வேலையாட்கள். |
| 6 |
| மன்னனைக் குடிகள் உழைப்பால் காப்பர் |
53 | கோவரிய சீவன் குடிகளுட லாவார் சீவன்சும் மாவிருக்கத் தேகமுழைத் தோம்புதல்போற் பூவலய மீதினில்தம் பூட்சிகளி னாலுழைத்துக் காவலனைக் காக்கக் கடனாங் குடிகளுக்கே. |
|
| மன்னவன் உயிர்போல்வான்; குடிகள் உடல் போல்வர்; உயிருக்கு உடல் உழைத்துக்கொடுப்பதுபோல் குடிகள் தங்கள் உடலா லுழைத்து, காக்கும் மன்னனைக் காத்தல் கடமை. |
| கோ-மன்னன். பூட்சி-உடம்பு. காவலன்-மன்னன். |
| 7 |
| _____ |
| நீ.-3 |