பக்கம் எண் :

34

 அதி. 5. ஞானாசிரியன் பெருமை
  இறைவனை உணர்த்தி இன்பருள்வோன் ஆசான்
54
அகவிரு ளகல ஞான விளக்கினை யருளின் ஏற்றிச்
சகலமு நல்குங் கேள்வித் தனத்தினை நல்கி யாதிப்
பகவன்தன் சொரூபங் காட்டிப் பவமற மிரண்டுங் காட்டிச்
சுகநிலை காட்டுந் தியாகத் தோன்றலை மறவாய் நெஞ்சே.
  ஞானவள்ளல் மனவிருள் நீங்க மெய்யுணர்வு விளக்கை ஏற்றுவன்; எல்லா நலமும் தரவல்ல கேள்விச்செல்வத்தைத் தருவன்; கடவுளருள் திருவுருவைக் காட்டுவன்; பாவ புண்ணியங்களை உணர்த்துவன். பேரின்பத்து அழுத்துவன். அப்படிச் செய்தருளிய ஞானாசிரியரை நெஞ்சே மறவாதே.
 அகம்-மனம். தனம்-செல்வம். சொரூபம்-திருவுரு. பவம்-பாவம். தியாகத்தோன்றல்-ஞானவள்ளல்.
 

1

  வேறு
  அழியா ஞான உடம்பளித்தோன் ஆசான்
55
கான லெனப்படு காய மிதப்பன்
தானவ மேபுவி தங்க அளித்தான்
ஈனமில் ஆரியன் என்று மொருங்கா
ஞானவு டம்பினை நல்கினன் அன்றோ.
  பொய்யாகத் தோன்றும் உடம்பினை இவ்வுலகில் வீணாகத் தங்க அளித்தான் ஈன்ற தந்தை. ஞானாசிரியன் என்றும் அழியாத உடம்பினை அருளினன்.
  கானல்-நீர்போல் தோன்றும் வெளி. காயம்-உடம்பு. அவம்-வீண். ஆரியன்-ஆசான். ஒருங்கா-அழியா.
 

2

  வேறு
  ஆசானா லன்றி அறியொணா நூற்பயன்
56
நாட்டமின்றி யொளியெப் பயனைநல்கும் மனையில்
பூட்டுபொன் திறவுகோ லினையலாது புகுமோ