| | தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| | அண்ணிடு வான்கொ னெஞ்சே யவனடி வழிப டாயே. |
|
| | மனமே! இரண்டு கண்களையும் இரண்டு காதுகளையும் தந்த கடவுள் அவையின்றியே தான் காணவும் கேட்கவும் வல்லன். அளவிலாத எண்ணங்களை அடக்கிவைத்து வேண்டும்போது வேண்டுவ வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த நெஞ்சையருளிய கடவுள் நாம் எண்ணும் தீய எண்ணங்களைத் தம் திருவுள்ளத்து அவ்வப்பொழுதே காணவும் வல்லன். செங்கோல் மன்னன் குற்றம் புரிந்தவர்களை ஒறுத்தடக்காது ஒழியான். ஒழுக்கங் குன்றா விழுப்பஞ்சேர் சான்றோர் தீயோரைக் கண்டால் கடிந்தகலாது நெருங்கி உறவுகொள்ளார். அதுபோல், நன்மைக்கு இன்பமும் தீமைக்குத் துன்பமும் தந்தருள்பவன் கடவுள். ஆயின், அவனை வல்விரைந்து தொழுவாயாக. |
| | சீறான்-சினவான். அண்ணிடுவான்-நெருங்குவான். |
| | 26 |
| | அன்பொன்றே நாடி ஆண்டானைத் தொழு |
| 569 | தடியடிக் கஞ்சி யீவோன் றருமனோ கற்பைக் காந்தன் கொடியனென் றஞ்சிக் காப்பாள் சதிகொலோ வீசன் மாட்டுப் படிறறு மன்பே யன்பாம் பயத்தினா னயத்த வாவான் முடிவிலான் பாற்கொள் பத்தி முத்தியி லுய்த்தி டாதால். |
|
| | `கொடிறுடைக்கும் கூன்கையர்தம்ழு தடியடி பொறுக்காது அஞ்சி அவலமுடன் ஈவோன் அறவோன் ஆகான். கணவன் கொலை முதலிய கொடுமை செய்வனே என்று அஞ்சித் தன் கற்பைக் காத்துக்கொள்பவள் கற்புடைய மனைவி ஆகாள். இவைபோல், ஆண்டவனிடத்தும் பொய் கலவாமல் வைக்கும் அன்பே சிறந்த அன்பாகும். அவ்வாறில்லாமல் அச்சத்தால், நயத்தால் ஒன்றை ஆசைப்படுவதால் என்றும் ஒருபடித்தாயுள்ள இறைவனிடத்து வைக்கும் அன்பு இறவாப் பேரின்பத்துச் செலுத்தாது. |
| | தடி-கம்பு. தருமன்-அறவோன். காந்தன்-கணவன்.சதி-மனைவி. அவா-ஆசை. முடிவிலான்-என்றும் ஒருபடித்தாயுள்ளவன். |
| | 27 |