| | தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| | ஓர் அணுவும் அசையாது என்று உறுதியாக வுணர்ந்து அவனைத் தொழுதல் வேண்டும், |
| | அனையனையன்-தாயை ஒத்த கடவுள். |
| | 29 |
| | சிற்றுயிரும் ஓம்பலிறை சிறந்த திருத்தொண்டு |
| 572 | தன்பணி செயற்கு வாய்ந்த மக்கள்தம் பணியி யற்ற மின்பணி சுடர்கள் பூத விரிவெலாம் விமல னீந்தான் நன்பணி யவைக ணாளும் நம்பணி யாற்று மையன் நன்பணி யியற்று கில்லேம் நன்பணி யனைய நெஞ்சே. |
|
| | மனமே! தன் திருத்தொண்டாகிய சிற்றுயிர் முதல்மக்கள் ஈறாகவுள்ள எல்லா உயிர்களையும் எல்லா வகையாலும் இடையறாது பேணுதற்கு வாய்ப்புள்ள மக்கட் பிறப்பினை நல்கினன். அம்மக்கட்கு வேண்டும் துணைபுரிய விளக்கமிக்க ஞாயிறு திங்கள் முதலிய கோள்களும், ஐம்பெரும் பூதங்களும் அமைத்தருளினவன் அழுக்ககன்ற கடவுள். அவன் திருப்பணியைச் செய்யாத நாம் நஞ்சுடைய நல்ல பாம்பை ஒப்போம். |
| | பணி-தொண்டு. பணி-பாம்பு. |
| | 30 |
| | ஆண்டவன் வேண்டும் அறம்புரிந்து வாழ்க |
| 573 | நரனருள் புரிந்தோ ரன்னோன் மனோரத நாடிச் செல்வர் பரனருள் பெறவ வன்சொன் மறைவழி பற்றி யன்னான் றிரமுறப் பகைக்கும் பாவச் சிக்கறுத் தவன்வி ரும்புந் தரமறு தருமந் தன்னைச் சார்ந்திடர் தீர்ந்துய் நெஞ்சே. |
|
| | மனமே! மக்கள் செல்வம் கல்வி முதன்மை (அதிகாரம்) முதலியவற்றால் சிறந்திருப்போரை அடைந்து அவரருளைப்பெற விரும்புவோர் அவர்தம் குறிப்பறிந்து ஏவல் செய்து வாழ்வர். அதுபோல், முழுமுதற் செம்பொருளின் திருவருளைப் பெற விரும்புவோர் அவர் அடியார் வாயிலாக அருளிய உலகியல் ஒழுக்க நூலாகிய மறையினைக் கைக்கொண்டு அறம்பல புரிந்து நல்வழியில் ஒழுகவேண்டும். அவர் மிகுதியும் வெறுக்கும் ஐம்பெரும் தீமையைக் கனவிலும் நண்ணவொட்டாது, நினைத்தல், கேட்டல், சொல்லல், காண்டல், கலத்தல் முதலியவற்றில் நல்லனவே பயின்று விலக்குதல் வேண்டும். ஒப்பில்லாத செப்பரும் சிறந்த புண்ணியங்களை இடையறாது செய்து பிறவிப் பெருங்கடல் நீந்திப் பேரின்பப் பெருவாழ்வு எய்திப் `பேரா இயற்கைத்ழு தாய் வாழ்வாயாக. |