| | நீதி நூல் |
| | நரன்-மக்கள். மனோரதம்-குறிப்பு; விருப்பம். மறை-ஒழுக்க நூல் (திருக்குறள்). திரம்-மிகுதி. சிக்கு-பிணக்கு. தரமறு-ஒப்பில்லாத. |
| | 31 |
| | சிற்றுயிர்க் கன்பிலார் செம்பொருட்கும் அன்பிலார் |
| 574 | கண்டமன் னுயிரைப் பேணான் காணொணாப் பரன்பா னேசங் கொண்டன னெனல்பொய் யாஞ்செங் கோல்வழி நிலார்கோன் சேயர்க் கண்டலர்க் கோனுக் கன்ப ராவரோ நற்கு ணங்கள் லிண்டவர் பிறர்க்கன் பில்லார் விமலர்க்கு மன்பி லாரால். |
|
| | மன்னவனின் மக்களுக்கு வேண்டும் நலம்புரிந்து உதவாது, அம்மன்னவனுக்கு வேண்டுவ புரிவாரை மன்னவன் அன்புடன் விரும்புவனோ? விரும்பான். அதுபோல், அனைத்துயிர்க்கும் அம்மையாய் அப்பனாய்த் திகழும் ஆண்டவனும் காணப்படும் ஓரறிவுமுதல் ஆறு அறிவு ஈறாகவுள்ள எல்லா வுயிர்கட்கும் முக்காலத்தும் மூவிடத்தும் முப்பொறியானும் செய்யத்தகுவனவற்றைக் காதலொடும் ஓவாது செய்யாமல் காணாத தன்னைமட்டும் இடையிடையே வணங்குவதுபோல் நடிக்கும் நற்குணமில்லாத வாய்மையில் புல்லரை ஒருநாளும் விரும்பான். அனைத்துயிர்க்கும் அன்பிலான் ஆண்டவனுக்கும் அன்பிலான் என்பது மறுக்கப்படாத மெய்ம்மையாம். |
| | சேயர்-மக்கள். அண்டலர்-நெருங்காதவர்; பகைவர். விண்டவர்-விட்டவர். |
| | 32 |
| | பகரொணா இன்பவளம் பத்தர்க்கு அருள்வன் |
| 575 | நலமிலா நரர்க்குத் தேவன் நல்கிய சராச ரங்கள் பலவள முளவே லன்னான் பத்தர்கள் பெறும்பே ரின்பத் தலவள மெற்றோ பாவச் சலதியுண் மூழ்கு வோர்சார் புலவினோ யெத்தன் மைத்தோ புந்தியே சிந்தி நீயே. |
|
| | மனமே! நன்மை ஒருசிறிதுமில்லாத மக்கட்கு நன்மையே பிழம்பாய்த் திகழும் ஆண்டவன், இவ்வுலகத்தில் நிற்பனவும் |