பக்கம் எண் :

286

  நீதி நூல்
 
  நாற்கால் விலங்கும் தன்னை வளர்த்தோர்கள் மருளும்படி பலவகை வேலைகளை மனங்கூடி மகிழ்வொடும் செய்யும். மரம் செடி கொடிகளாகிய நிலைத்திணைப் பயிர்களும் பாடுபட்டுவைத்து வளர்த்தோர்க்குத் தளிர், இலை, அரும்பு, பூ, பிஞ்சு, வடு, காய், பழம், கனி முதலிய சிறந்த பயன்களைத் தரும். ஆண்டவன் மக்களாகிய நம்மை ஒரு பொருளாகத் திருவுளங்கொண்டு உடம்பொடு பொருத்திப் படைத்து உலகமும் உண்பொருளும் பிறவும் தந்தருளினன். அப்படிப்பட்ட முழுமுதலை அன்பால் நினைந்து ஆர்வத்தால் வழுத்திக் காதலாற் கைகூப்பித் தொழுதலாகிய போற்றுதலைச் செய்யார் மிகவும் கடையவராவர்
  விருகம்-மிருகம்; விலங்கு. வியப்பு-மருள்; அதிசயம். சிருட்டி-படைப்பு. புன்மையோர்-கடையர்.
 

35

  கடவுளை எய்தார் கடவார் பிறப்பு
578
கரும்புணக் கூலி கேட்குங்
    கருமம்போல் வறுமை யாளர்க்கு
அரும்பொரு ளினைத்துன் புற்றோர்க்
    கானந்த சாகரத்தை
வரும்பிணிக் கொரும ருந்தை
    மனத்தின்க ணொளிர்தீ பத்தை
விரும்புவோர் மனோக ரத்தை
    மேவுறார் கோவு றாரே.
  கரும்பு தின்பதற்குக் கூலிகேட்கும் உண்மையுணராதாரைப் போன்று, மிடிபட்டவர்க்கு வேண்டும் மிகுபொருளாயிருப்பவன் கடவுள். நீங்காத் துன்புற்றோர்க்கு ஓங்கும் இன்பக்கடல் கடவுள். வினைப்பயனாலும் வேண்டாச் செயலாலும் வரும் நோய்க்குத் தக்க மருந்து கடவுள். தூய்மையும் வாய்மையும் அன்பும் தொடர் நினைப்புமுள்ள நல்லோர் தூயமனத்தின்கண் நின்றொளிரும் நந்தா விளக்கு கடவுள். திண்ணியராய் எண்ணுவார் எண்ணத்தை ஈடேறச் செய்யும் எழில் கடவுள். இத்தகைய கடவுளின் இணையடியின்பத்தினைப் பொருந்தாதவர் ழுபிறவிப் பெருங்கடல் நீந்திழு இறைவன் பேரின்ப வீட்டை எய்தார்.
  கருமம்-செய்கை. ஆனந்தம்-இன்பம். சாகரம்-கடல். கோ-வீடு.
 

36