| | தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| | பரமனை வணங்குநாள் பயனுடைத் திருநாள் |
| 579 | எவ்வஞ ருறினு ஞாங்க ரிறையுள னென்னத் தேறின் அவ்வஞர் வருத்துங் கொல்லோ வையனை யுன்னிப் போற்றிச் செவ்வழி நிற்கு நாளே சீவனுய் கின்ற நாளாம் ஒவ்வரு மிறைவற் போற்றா தொழியும்வாழ் நாள்பாழ் நாளே. |
|
| | எவ்வகைத் துன்பம் நேர்ந்தாலும், நேர்ந்த அவ்விடத்தே நம்மைக் கைவிடாது காத்தருளக் கடவுள் காத்திருக்கின்றான் என்னும் உண்மையைத்தெளிந்தால், அப்பொழுதே அத்துன்பம் நம்மை வருத்தாது அகலும். கடவுளை அகங்குழைந்துருகி அன்பான் நினைந்து பரவுதல் செய்யும் நாளே நாம் உய்யும் நாளாகும். ழுதனக்குவமை இல்லாதான் தாள் வணங்காதவர்ழு வாழ்நாள் பாழ்நாளாகும். |
| | அஞர்-துன்பம். ஞாங்கர்-இடம். தேறின்-தெளிந்தால். ஐயன்-கடவுள். உன்னி-நினைத்து. போற்றி-பரவி. சீவன்-உயிர். பாழ்நாள்-பயனின்றிக் கழியும் வீழ்நாள். |
| | 37 |
| | அடியரை இகழ்தல் ஆண்டானை இகழ்தலே |
| 580 | தெய்வநாத் திகமத் தெய்வம் யாவினுஞ் சிறந்த தென்ன உய்வகை பத்தி செய்யா தொழிதல்நல் லொழுக்க மின்மை பொய்வளர் தெய்வம் போற்றல் புனிதரைத் தளியை எள்ளல் மெய்வளர் வேத நிந்தை விமலதூ டணங்க ளாமால். |
|
| | கடவுளில்லையென்னும் பாழ்ங்கொள்கை, உலகுடல் உயிரினும் சிறந்து நிலவும் கடவுளைக் காதல்கொண்டு கைதொழுது பத்திசெய்து வாழ்வதே உய்யும்வகை எனக் கொள்ளாதிருத்தல். |