பக்கம் எண் :

288

  நீதி நூல்
 
  நல்லொழுக்கமில்லாதிருத்தல், இறந்துபட்ட ஆவிகளாகிய சிறு தெய்வத்தை வழிபடுதல், பிறர்க்கென வாழும் பெற்றிவாய்ந்த தூயோரைப் பெம்மான் வீற்றிருந்தருளும் திருக்கோவிலை இகழ்தல், மறைநூலை முறையுற உணராமலே குறைகூறுதல் முதலியவை தெய்வ இகழ்ச்சியாகும்.
  நாத்திகம்-மெய்ப்பொருள் இல்லெனும் பாழ்ங்கோள். பொய் வளர் தெய்வம்-சிறுதெய்வம். புனிதர்-தூயோர்; மெய்யடியார். தளி-திருக்கோவில். எள்ளல்-இகழ்வல். வேதம்-மறை. நிந்தை-இகழ்வு. விமலன்-அழுக்கற்றவன்; கடவுள். தூடணம்-இகழ்வு.
 

38

  எல்லாமாம் இறைவனை இடைவிடாது ஏத்து
581
குருவிறை சீட னாநங் கோனவன் குடிநா மன்னான்
ஒருபிதா நாஞ்சே யாண்டா னுவன்வழித் தொண்ட னாமவ்
வுருவிலா னுடையா னாமே யுடைமையன் னவனே தாதா
மருவிர வலனா மென்ன மதிமதி மதியில் நெஞ்சே.
  அறிவிலா மனமே! எல்லாம் வல்ல இறைவன் உறுதிமொழி மொழிந்து உய்விக்கும் நல்லாசானாவன். நாம் வழிப்பட்டொழுகும் மாணாக்கர். ஆண்டவன் செங்கோலும் வெண்குடையும் ஒண்கழலும் வெள்வாளும் வாய்ந்த வேந்தன். அவன்பால் அன்பகலாக் குடிகள் நாம். எவ்வுயிர்க்கும் செவ்விய தந்தை அவன். நாம் அவனின் காதலஞ் செல்வப்பிள்ளைகள். அவன் ஆண்டான். நாம் அடிப்பணி புரியும் தொண்டர். பிழம்புஇல் பிழம்புஇல் உள் பிழம்பாகிய உருவம் அருவம் அருவுருவம் என்னும் மூன்றுங் கடந்த முழுமுதலுடையான் அவன். நாம் அவனுடைமையாகிய அடிமை. ழுவேண்டத் தக்க தறிந்து வேண்ட முழுதும் தந்துழு காக்கும் வள்ளல் அவன். நாம் அவனால் வலியத் தந்தருளப்படும் பொருள்களைப் பெற்று வாழும் இரவலர். இவ்வுண்மையைக் கருதுவாயாக.
  உருவிலான்-தோன்றி மறையும் மாயாவுருவிலாதவன். உடைமை-உயிரில் பொருள் ஆண்டவனின் உடைமை; உயிருள் பொருள் ஆண்டவனின் அடிமை, உறுதிமொழி-உபதேசம்.
 

39

  ஆண்டான் அடிபோற்ற ஆகும் பெருமகிழ்வு
582
கற்பினார் கணவர் தம்மைக்
   காண்டொறுங் களித்தல் போலும்
பொற்புறு சிறார்தாய் கையிற்
   பொருந்துபு மகிழல் போலும்