| | தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| | அற்புத வுவகை யோடும் அடிகளை யடிகள் போற்றாது உற்பவ வுவர்ப்போ டேத்து முள்ளத்தார் கள்ளத் தாரே. |
|
| | ழுசொற்காத்துச் சோர்விலாக்ழு கற்பினள் தன் கணவனைக் காண்டொறும் பெருமகிழ்வு கொள்வள். சிறுமகார் தவமிருந்து ஈன்றெடுத்துப் போற்றும் தாய் திருக்கையைச் சாருந்தோறும் இன்புறுவர். இவைகளைப் போன்று எல்லாமாம் அடிகளாகிய கடவுளின் திருவடிகளைப் போற்றி நல்லோர் இன்புறுவர். அவ்வாறு செய்யாது ழுபொக்கமிக்கவராய்ழு வெறுக்கத்தக்க தீய செயல்களைப் புரியும் பாவிகள் வெறுப்புள்ளத்தராய் வழிபடுவார். அவர் படிறு நிறைந்த கள்ளத்தராவர். |
| | பொருந்துபு-சாருந்தோறும். உவர்ப்பு-வெறுப்பு. |
| | 40 |
| | தாயினும் பிழைபொறுத்துத் தாங்குவோன் கடவுள் |
| 583 | புகர்சில வியற்றிற் றாயும் பொறுப்பள்கொல் மனத்தால் வாக்கால் இகழுறு செயலா னாஞ்செய் ஏதமெண் ணிலவென் றாலுஞ் சகமிசைத் தண்டி யாது சாந்தனை யும்பொ றுத்துச் சுகமெலா மீயுந் தேவைத் துதித்தன்பாற் பதித்துய் நெஞ்சே. |
|
| | மனமே! குற்றம் செய்யும் பிள்ளைகளை நற்றவத் தாயும் பொறுத்தல் செய்யாள். நாம் நினைப்பால், சொல்லால், செயலால் பொறுக்கலாற்றாத எல்லாராலும் எள்ளற்பாட்டுக்குரிய அளவிலாக் கொடுஞ்செயல்களை ஓவாது செய்யினும் ஆண்டவன் அவைகளை மனம் பொறுத்து மண்மேல் சிறிதும் தண்டியாது ஆமளவும் சாந்துணையும் நலமெலாம் அருள் செய்கின்றான். அத்தகைய ஆண்டவனை மறவாமனத்தால் விடாது தொழுது உள்ளத்து வைப்பாயாக. அதுவே ழுவீழ்நாள் படாஅமை நன்றாற்றும்ழு விழுமிய வழியாகும். அவ்வழியே வீடெய்தி உய்யும் நிலைக்குத் துணையாகும். |
| | நீ.-19 |