பக்கம் எண் :

290

  நீதி நூல்
 
  புகர்-குற்றம். ஏதம்-கொடுமை. சகம்-நிலம்; மண். சுகம்-நலம்.
 

41

  வேறு
  அடியிணை பிடித்தென்றும் அகலாமை அன்பு
584
உற்றசஞ் சீவினியை யுண்ணா தொழியுமதி
யற்றவர்போன் மாதாவாய் அப்பனா யாருயிராய்ச்
சுற்றமாய் வாழ்வாய்த் துணையாய்நம் பாலுறையும்
கொற்றவனைப் போற்றிக் குறையிரந்து பல்வரமும்
உற்றநல் காயாயின் விடேனென்று முறைகால் பூண்டெவ்
வற்றமுமேத் தோமினிவே றாருதவி சொன்மனமே.
  நெஞ்சே! கையிற்கிடைத்த உயிருய்யச் செய்யும் மருந்தாம் அமிழ்தத்தை உண்ணாது விட்டொழியும் அறிவில்லாதவர்போல், அம்மையாய் அப்பனாய் உடங்கியைந்துணர்த்தும் ஆருயிராய், ழுஅருப்பறா ஆக்கம் பலவும்தரும் விருப்பறாச் சுற்றமாய்ழு குறைவிலா நிறைவாம் வாழ்வாய், என்றும் நீங்கா இன்துணையாய், நம்மைவிட்டு நீங்காது நம்மோடே யுறையும் வெற்றிப் பெரும்பொருளை, அன்புடன் தொழுது மன்றாடிக்கேட்டுப் பல வரங்களையும் தந்தருள வேண்டுக. தாராதொழியின் உன் திருவடிப்பிடியை விட்டகலேனென்று முறைமுறையாக அவன் திருவடியைப் பற்றிக்கொள்வாயாக. இவை முறையாகவும், நேரும்பொழுதெல்லாம் அவன் திருவடியைத் தொழாதிருந்தால் நமக்கு வேறு உதவி எவ்வாறு யாரால் கிடைக்கும்? கூறுவாயாக.
  சஞ்சீவினி-உயிர்மருந்து. கொற்றவன்-வெற்றியுள்ளவன். குறையிரந்து-மன்றாடிக்கேட்டு.
 

42

  ஆண்டான் அடிநினைத்து ஆடாய் நீபாடாய்
585
வீடாத முத்தொழிலோன் விண்ணவர்கோன் மண்ணவர்கோன்
கோடாத செங்கோலான் குற்றமில்லா னித்தமுனை
வீடாகக் கொண்டுறையு மேன்மையுற்றா யிவ்வருளை
நாடா யளிநீடாம் நாத்தழும்பப் போற்றிநிதம்
பாடா யுருகாய் பரவசமிக் கூர்ந்துநனி
யாடாய்கொண் டாடாய்வே றாருதவி சொன்மனமே.