| 291 |
|
| | தெய்வத்தன்மையும் வாழ்த்தும் | | | நெஞ்சமே! என்றும் விட்டு நீங்காப் பருமை முத்தொழிலாகிய ஆக்கல், அளித்தல், அழித்தல்களைச் செய்வோனும், வினைப்பயனாகிய நுகர்வொன்றேயுடைய விண்ணவர்க்கும், வினையும் வினைப்பயனும் செய்தும் நுகர்ந்தும் வரும் மண்ணவர்க்கும் உள் நின்று உய்க்கும் தலைவனும், முறைமை தவறா நடுநிலைச் செங்கோல் வேந்தனும், இயல்பாகவே கட்டில்லாதவனும் ஆகிய முழுமுதல்வன் நாளும் எல்லா இருக்கையினும் உன்னையே சிறந்த இருக்கையாகக் கொண்டருளும் தகுதி யடைந்தாய். அத்தகைய திருவருளை நாடாமலும், அவன்பாற் காதல் கொள்ளாமலும், அவன் புகழை நாத்தழும்பேற ஏத்தாமலும், ஏத்திப் பாடாமலும், அனல்கண்ட மெழுகென அகம் உருகாமலும், அவன் வயப்பட்டுத் தன்னை இழவாமலும், ஆடாமலும், அவனருளைக் கொண்டாடாமலும் இருக்கின்றாய். அவனை யொழித்து உனக்குற்ற துணை வேறுண்டோ சொல். | | | வீடாத-நீங்காத. முத்தொழில்-ஆக்கல், அளித்தல், அழித்தல். நித்தம்-நாளும். பரவசம்-தன்னிழப்பு. | | | 43 | | | ழுபொருள்சேர் புகழ்ழு புகன்று போற்றுதல் கடனே | | 586 | சிந்தா குலந்தீர்க்குஞ் செல்வமே நல்வளமே நந்தா வறவிளக்கே நாயகமே தாயகமே யெந்தாயே கண்ணே யினியவுயி ரேநலங்கள் தந்தாளுங் கற்பகமே தற்பரமே யற்புதமே கந்தா மணியே கதிநிலையே ஆரமுதே அந்தாயே யென்றேத்தா யாருதவி சொன்மனமே. |
| | | நெஞ்சமே! ஆண்டவன் திருவடியிணையை உள்ளக்கவலையை ஒழித்தருளும் ஒண்பொருளே என்றும், அழிவில் செழுமையே என்றும், கெடாத நன்மை நடுவிளக்கே என்றும், முதல்வனே என்றும், பொன்றாப் புகலிடமே என்றும், எந்தையே! எம்மிரு கண்ணே! இன்னுயிரே! நாளும் வேண்டும் நலங்கள் தந்தாளும் நந்தாக் கற்பகமே! என்றும் தானே தனிமுதலாம் பெரும்பொருளே! என்றும், ழுவியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்துழு விளங்கும் விழுப்பொருளேயென்றும், அனைத்துயிர்க்கும் பற்றுக்கோடாம் அருமணியே என்றும், `வானோர்க்குயர்ந்தழு மேனிலையேயென்றும், உண்ணத்தெவிட்டாப் பண்ணமுதே என்றும், `தாயினும் சாலப்பரிழு வுடைய அழகார் தாயே என்றும் அகங்குழைந்து அன்புருகி இன்புற்று மெய்பொடிப்ப நாக்குழறப் |
|
|
|
|