| | நீதி நூல் |
| | `பூக்கையாலட்டிப்ழு போற்றுவாயாக. அவனையன்றி உனக்குற்ற துணை யாருண்டு சொல்லு. |
| | சிந்தாகுலம்-உள்ளக்கவலை. வளம்-செழுமை. நந்தா-கெடாத. அறம்-நன்மை. நாயகம்-முதன்மை. தாயகம்-புகலிடம். கற்பகம்-கற்பித்துத் தரும் திருவருள். தற்பரம்-முழுமுதல்வன். கந்து-பற்றுக்கோடு. |
| | 44 |
| | வேறு |
| | பெரியானைச் சிறியானைப் பிரியானைப் பேசு |
| 587 | அடர்ந்தமண லெனக்கணக்கி லண்டபகி ரண்டமெலாங் கடந்துநின்ற பெரியானைக் கடுகினுழை சிறியானைத் தொடர்ந்தவன்பர்க் குரியானைத் துகளுடையோர்க் கரியானைப் படர்ந்தவருள் பிரியானைப் பழிச்சாயோ நாவே பரமசுகோ தயநிலையைப் பழிச்சாயோ நாவே. |
|
| | திணிந்த மணலினும் பலவாய் எண்ணிலடங்காப் பல்வேறு அண்டங்களை யெல்லாம் ஊடுருவி அப்பால் சென்று என்றும் பொன்றாது நின்றருளும் பெரும் பொருளாம் பெரியானை, கடுகினுள் நுழையும் நுண்பொருளாம் சிறியானை, பற்றற்றுப் பற்றப்படும் பொருளாம் தன் (கடவுள்) பால் விட்டுநீங்காத பேரன்பர்க்கு உரியானை, மனமாசகலா வன்கணாளர்க்குக் கருதவும், காணவும், மருவவும் பொருந்தாதவனை, அருளம்மையை என்றும் பிரியாத் தெருள் அப்பனை நன்னாவே நவின்று வழுத்துவாயாக. வேறெங்கும் கிட்டா வீறுடை அழிவில் பேரின்ப ஊற்று நிலையத்தை வழுத்துவாயாக. |
| | துகள்-மனமாசு. பரமசுகோதயம்-அழிவில் பேரின்ப ஊற்று. பழிச்சு-வழுத்து. |
| | 45 |
| | தொண்டர்க்கு எல்லாமாம் துணைவனைத் தொழு |
| 588 | தொண்டரெனும் பயிர்தழையச் சொரிமுகிலை யவரிதய முண்டகங்க ணெகிழ்த்தொளியை மும்மலம்வே ரறவீசும் சண்டவளி யினைப்பாவத் தழலவிக்குந் தண்புனலைக் கண்டவர்தஞ் சுகநிலையைக் கருதாயோ மனமே காணரிய பரஞ்சுடரைக் கருதாயோ மனமே, |
|