பக்கம் எண் :

293

  தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
 
  நடமாடுங் கோயிலாம் நல்லுயிர்க்கும், படமாடும் கோயிலாம் திருக்கோவிற்கும் நாற்பெருந் தொண்டினை நாளும் இயன்றவாறு இயற்றும் தொண்டரெனும் எழிற்பயிர் செழிக்கப் பொழியும் செழுமழையை, தொண்டர் திருவுள்ளமாகிய தாமரையை மலரச் செய்யும் அறிவொளியை, மும்மலமாகிய `ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடு, விட்ட பெருமரத்தை வேரற வீழ்த்தும் சூறைக் காற்றை, பாவப் பெரு நெருப்பினைப் பட்டொழிய அணைக்கும் அருள் நீரை, ழுஓர்த்துள்ளம் உள்ளதுணர்ந்தழு உரவோராம் மெய்யடியார்க்குப் பொய்யாப் பேரின்பை நெஞ்சமே வஞ்சமின்றிக் கருதுவாயாக. அவன் `அருட்கண்ணே கண்ணாகழுவன்றி வேறொரு வழியானும் காண்டற்கரிய உள்ளொளி பெருக்கும் உலப்பிலாப் பேரொளியை உன்னுவாயாக.
  முகில்-மழை. இதயம்-நெஞ்சம்; திருவுள்ளம். முண்டகம்-தாமரை. சண்டவளி-சூறைக்காற்று. சுகநிலை-பேரின்பநிலை. பரஞ்சுடர்-பேரொளி.
 

46

  வேறு
  அறிவாற்றல் அன்பாம் ஆண்டவனைத் தொழு
589
ஒன்றாகி மூன்றாகி யுயிர்த்துணையா யொப்பிலதாய்
நன்றாகி நின்றதனி நாயகனைத் துதிமனமே
நாயகனைத் துதிபுரியி னன்மையுறுந் தின்மையறுந்
தீயகம்போ மெய்துறுங்காண் தேவர்பெறும் பேறே.
  நெஞ்சமே! ஒப்பில்லா முழுமுதலென ஒன்றாய், தானே விளங்கும் அறிவு, ஆற்றல், அன்பென மூன்றாய், விளக்க விளங்கும் அம்மூன்றும் உடைய உயிர்களுக்கு அவற்றை விளக்கும் உயிர்த் துணையாய், உடனாய் நின்றருளும் சிறந்த காதலம் தலைவனைப் போற்றுவாயாக. அத்தலைவனைப் போற்றின் என்றும் மாறா இன்பமாம் நன்மை வந்தெய்தும், அதற்கு இடையூறாகிய தீமை அற்றொழியும். நிரயத்துன்பம் அகலும். வீட்டின்பம் பெருகும். அவ்வின்பமே தெய்வத்தன்மை எய்தினார் பெறும் பேறாகும்.
  தனிநாயகன்-சிறந்த காதலம் தலைவன். தீயகம்-நிரயம்; நரகம்.
 

47

  சீலத்தார் சிவனடியைச் சென்றுசேர்ந் தின்புறுவர்
590
தீயர்தமைச் சுடுந்தழலைச் சீலர்தமக் கொருநிழலை
ஆயரிய பரம்பொருளை யாவலினேத் தாய்மனமே