| | நீதி நூல் |
| | ஆவலினீ யேத்துவையே லல்லற் கரையேறி மேவரும்பே ரானந்த வெள்ளமதிற் றோய்வாயே. |
|
| | நீத்தார் நிகழ்த்தும் அறநூல்வழி யொழுகாத அன்பில் கொடியரை `என்பிலதனை வெயில் காயுமாறுழு சுடும் அறக்கடவுளை நூல்வழி யொழுகும் மாலகன்ற சீலர்க்கு ஆல்போல் இன்பருளும் அருள்நிழலை, ஆராய்தற்கரிய `மாற்ற மனங்கழிய நின்ற மறையோழு னாகிய பெரும்பொருளை நீங்காக் காதலுடன் நெஞ்சே ஏத்துவாயாக. அங்ஙனம் ஏத்தினால் பிறவிப் பெருங்கடலாகிய பெருந்துன்பக் கரையேறி, அன்பரல்லார்க்குப் பொருந்துதற் கரிய பெரும் பேரின்பமாகிய ழுபேரா ஒழியாப் பிரிவில்லா, மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலுள்ழு மூழ்கி என்றும் இன்புற்றிருப்பாய். |
| | தழல்-தீ. சீலர்-நல்லொழுக்கமுடைய சான்றோர், ஆயரிய-ஆராய்தற்கரிய. ஆவல்-நீங்காக் காதல். அல்லல்-பிறவித்துன்பம். மேவரும்-பொருந்துதற்கரிய. பேரானந்தம்-பேரின்பம். வெள்ளம்-கடல். |
| | 48 |
| | வேறு |
| | மேலோனை நூலோனைத் தொழுதலே விழுப்பயன் |
| 591 | ஐம்புலனுந் தானா யவைநுகரு மின்பமுமாய் வெம்புலநோய் மாமருந்தா மேலோனை நூலோனை நம்புமவர்க் கடைக்கலத்தை நாடீர் நமரங்காள். |
|
| | உயிர்த்தொடர்பாம் ஆண்டவனின் அடிமையாய், மக்களாய் ஆருயிர்த் தோழராய், அகம்நிறை காதலஞ் செவ்வியராய் வாழும் நம்மவர்களே! ஒன்றாய் நிற்குந் தன்மையில் ஐம்புலனும் தானாய் வேறாய் நிற்கும் தன்மையில் அப்புலன்கள் ழுகண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிந்துழு நுகரும் இன்பமாய், அவ்வின்ப இடையீடு ஏற்படின், அவற்றை நீக்கி இன்புறுத்தும் அருள் மருந்தாய் விளங்கும் முழுமுதலை, மறைந்த குறைவிலா நிறைவை, நம்புவார்க்கு அடைக்கலமாஞ் செம்பொருளை நாடுவீர்களாக. |
| | ஐம்புலம்-மெய், வாய், கண், மூக்கு, செவி. நுகரும்-அழுந்தி அறியும்; அனுபவிக்கும். நமரங்காள்-நம்மவர்களே! |
| | 49 |
| | ---------- |