பக்கம் எண் :

296

  நீதி நூல்
 
  இடையூறுமின்றிச் செவ்விதின் செங்கோலோச்சுதல் வேண்டும். இடருறுவானானால் குடிகளுக்கு வாழும் வகை இல்லை. அதனால், பகைவரால் பிறவாற்றால் வேந்தன் துன்புறாமல் ஆந்தனையும் அன்பும் அறிவாற்றலும் முன்பும் வாய்ந்த நற்குடிகள் ஒருங்கு சேர்ந்து அவனைக் கண்ணிமையிற் காப்பர்.
  தரு-மரம். வல்லி-கொடி. பெருமகன்-வேந்தன். இடர்-துன்பம். மருவலர்-பகைவர். மகிபன்-வேந்தன்.
 

2

  மன்னன் செயலை மதித்தே நடப்பர்
594
அல்லாரு மழையெவர்க்கு மமுதெனினுங் காலமுணர்ந்
தெல்லாரு நலம்பெறச்செய் திடுங்கொல்லோ வொருநிருபன்
பல்லாரு மகிழ்வுறவே பண்ணலசாத் தியமெனலால்
நல்லாரன் னோன்செயலை நயமெனக்கொண் டொழுகுவரால்.
  கருமைநிறம் பொருந்திய மேகம் அனைத்துயிர்க்கும் அமிழ்தமாகும். எனினும், அதனிடத்துக் `கெடுப்பதும் எடுப்பதுழு மாகிய இருசெயல்கள் காணப்படுகின்றன. அம்மட்டோ வேண்டும் காலம் அறிந்து பெய்யாது. அதனால், எல்லாருக்கும் அவரவர் விரும்பியவாறு நலம்செய்ய இயலாது. அதுபோல், வேந்தனும், மாந்தரெல்லார்க்கும் ஒருசேர விரும்பியவாறு நலம் செய்ய முடியாதவனாகின்றான். ஆயினும், நல்லோர் அவன் செயலை முறைமை வாய்ந்த இறைமை எனவே போற்றி நடப்பர்.
  அல்-கருமை. அமுது-சாவா மருந்து. நிருபன்-வேந்தன். பண்ணல்-செய்தல். அசாத்தியம்-முடியாதது. நயம்-முறைமை. ஒழுகுதல்-நடத்தல்.
 

3

                       ----------