பக்கம் எண் :

297

  அதி. 5--ஞானாசிரியன் தன்மை
 

     மேலோர் நடப்பதே ஏனோர்க்கும் விதியாம்

595
மகவின் கரம்பற்றி முன்றா னடந்து
    வளமேவு நடைகாட்டி மகிழன்னை போலுந்
தகமுன்பு தாமாடி நடனம் பயிற்றுந்
    தகையோர்கள் போலுஞ் சகத்தோர் செவிக்கட்
புகவேநல் வழியோது புரையற்ற புனிதர்
    பொறைசீல மன்பீகை புகழ்வாய்மை விரதம்
பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கு மவரோர்
    பதியாகி விதியாகி மதியோது வாரால்.
  பிள்ளையை நடைபயிற்றுந் தாய், அப்பிள்ளையின் கையைப் பிடித்து நடக்கச்செய்து தானும் உடன்நடந்து மகிழ்வள். கூத்துப் பயிற்றும் கூத்தர், ஆடுவாரை ஆடச்செய்து தாமும் உடன் ஆடிக்காட்டுவர். அவைபோல், மெய்யுணர்வு கைவரப்பெற்ற குற்றமில் மேலோர், பேரன்புவாய்ந்த மாணவராம் அடியவர் குழாங்களுக்குச் செவியறிவுறூஉவாம் (உபதேசம்) உறுதிமொழி மொழிந்து, தாம் பொறை, சீலம், அன்பு, ஈகை, வாய்மை, நோன்பு முதலிய நற்பண்புகள் யாவற்றுக்கும் ஓர் `உறைவிடழு மாய் அவற்றிற்கு அன்னார் நடைமுறையே மாறா ஊழாய் அறிவு கொளுத்துவர்.
  மகவு-பிள்ளை. கரம்-கை. புரையற்ற-குற்றமற்ற. புனிதர்-மேலோர். பதி-உறைவிடம். விதி-ஊழ். மதி-அறிவு.
 

1

  எல்லார்க்கும் இனியராய் இயல்பவர் மேலோர்
596
அயலார் மதத்தைக் குணத்தைப் பழிக்கா
    ரறமீது மறமீ தெனச்சொல்வர் பொதுவாச்
சுயவூதி யந்தன்னை நட்டத்தை மதியார்
    சூழ்ந்தோர்க ளீடேறு மாறென்று முயல்வார்
இயல்செல்வர் மிடியாளர் நல்லார்க ளல்லாரென்
    பேதமோ ராரியா வர்க்கு மினியார்
பயனொன்று விழைவோரை மறைதன்னி லேலார்
    பழியற்ற மொழிபெற்ற வழியுற்ற மேலோர்.