பக்கம் எண் :

298

  நீதி நூல்
 
  செந்நெறியொழுகும் செல்வர், தங்கள் கொள்கையில்லாத பிற கொள்கையாளர்கள் சமயக் கருத்துக்களை ஒருசிறிதும் ழுநன்றல வாயினும் நான் மாறு உரைக்கிலேன்ழு என்பதற்கிணங்கப் பழியார். பொதுவாக நன்னெறி யொழுகி இன்பெய்தும் புண்ணியம் ஈது, புன்னெறிச்சென்று துன்பெய்தும் பாவம் ஈது என உளங்கொள விளம்புவர். தமக்கு வரும் ஆக்க அழிவுகளாகிய ஊதிய இழப்புகளை எண்ணார். தம்மைச் சார்ந்தவர்கள் செல்வமும் சிறப்பும் எய்தி ஈடேறவே எண்ணி என்றும் உலையா முயற்சி தலையாகக் கொள்வர். செல்வர், வறியர், நல்லார், பொல்லார் முதலிய எவ்வகை வேறுபாடும் கனவினும் கருதார். இறைவன் போன்று யாவர்க்கும் இனிய இயல்பினராவர். சிற்றூதியமேனும் விழைபவர் நற்றிறம் படரும் நல்லோர் ஆகார் என்று, அவரைத் தம் சுற்றமாகக் கொள்ளார். இவர்களே குற்றமற்ற நன்மொழிசேர் செந்நெறியினராவர்.
  சுயவூதியம்-தம் வருவாய்.
 

2

  அதி. 6--பொய்க்குருவின் தன்மை
  இழிகுரவர் எந்நாளும் இயல்நெறி ஒழுகார்
597
ஒளியை வாற்புறம் போக்கியோர் செவ்வுரு
நளியி ருட்டி னகருதல் போற்கற்ற
தெளிவெ லாமொரு பாங்க ரெறீஇச்செல்வர்
இளிகொள் தீநெறி யீனக் குரவரே.
  செவ்வட்டை என்னும் சிற்றுயிர் எல்லாருக்கும் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் இயல்பாகவே விரும்பும் இன்ப ஏதுவாம் ஒளியை வாற்புறமாகிய பின்புறம் தள்ளி எவரும் வெறுக்கும் துன்ப ஏதுவாம் நிறைஇருளை விரும்பி முன் ஊர்ந்து செல்லும். அதுபோல், கற்ற நூற்பொருளின் தெளிவாம் நன்மைகளை யெல்லாம் ஒருபுறம் புறக்கணித்து ஒதுக்கிவிட்டு மனம் போனபடி இழிந்த தீநெறியிலே செல்வர்; பிறப்பற முயலாப் பேதையிற் பேதையாம் குருமார்.
  செவ்வுரு-செவ்வட்டை. நளியிருள்-நிறைந்த இருள். நகருதல்-ஊர்தல். எறீஇ-எறிந்து; ஒதுக்கி. இளி-இழிந்த, குரவர்-குருமார்.
 

1