பக்கம் எண் :

299

  தாய்தந்தையரை வணங்கல்
 
 

    ஓதியவழி நில்லார் ஊதியம் எய்தார்

598
உணர்ந்துந் தாம்பிறர்க் கோதியு நல்வழி
தணர்ந்து ளோர்சுடர் தாங்கித்தன் மேலிருள்
புணர்ந்த தம்பங்கொல் புத்தகந் தாங்கிய
கொணர்ந்த சட்டங்கொல் பால்கொள்க லங்கொலோ.
  நன்னெறி யொழுகாது தீநெறியொழுகும் இழிந்த குரவர்கள், நூல்வழியாக நன்மைகளை யுணர்ந்தும், அவற்றைப் பிறர்க்கு எடுத்துரைத்தும் தாம் அவ்வழி யொழுகாது விலகி நடப்பர். அவர், தம் தலைமேல் விளக்கொளியைத் தாங்கி யாவர்க்கும் இருளையகற்றிப் பொருளை விளக்கும் விளக்குத்தூண், தன்மாட்டு இருளையே வைத்துக்கொண்டிருக்கிறது. அதுபோலவும், புத்தகத்தைச் சுமந்துகொண்டு வரும் கவளிகையாகிய புத்தகப் பலகை. அப்புத்தகத்தின் உள்ளுறையை ஒருசிறிதும் உணராமலிருக்கிறது. அதுபோலவும், பால் வைத்திருக்கும் நன்கலம், அப் பாற்சுவையை யுணராது. அதுபோலவும் பயனில் பதடியராவர்.
  தணர்ந்து-தணந்து; நீங்கி; விலகி. தம்பம்-தூண். சட்டம்-பலகை.
 

2

  அதி. 7--தாய்தந்தையரை வணங்கல்
  ஈன்றார் கடுஞ்சொல் ஏற்றலே கடனாம்
599
தளர்வுறு மூப்பா லீன்றோர்
    சாற்றும்வன் மொழிபொ றாது
கிளர்வறு சினமீக் கொள்ளும்
    பாவிகே ளவருன் னாலுன்
இளமையி லுறுந்துன் பங்கட்
    கிடைந்துசற் றுனையோம் பாரேல்
வளருவாய் கொன்னீ யின்னே
    வாழ்வைகொல் முனிவை கொல்லோ.
  உடலும், உளமும், உணர்வும் தளர்வுற்று மூப்பெய்திய இருமுதுகுரவராம் தாய் தந்தையர் பசி, நோய், குற்றங்காண்டல் முதலியவற்றால் பொறுமை இழந்து, கடுஞ்சொல் சொல்