பக்கம் எண் :

300

  நீதி நூல்
 
  வர். அச்சொற் பொறாது மக்கள் மனக்கிளர்ச்சியை அவிக்கும் சினங்கொள்ளுதல் கூடாது. கொள்வாரேல் பெரும் பாவியராவர். அப் பாவிகள் ஒன்று உணரவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்குங்கால் அப்பிள்ளைகளின் இளமைப் பருவத்தில் தாங்கள் எய்தும் சொல்லொணா அல்லலுக்கஞ்சிப் பேணாது விட்டுவிடுவராயின், பிள்ளைகள் கட்டிளமைப்பருவம் எய்துமா? மணம் பூண்டு வாழுமா? இப்பொழுது செய்யும் தகாத முனிவினைத்தான் செய்யுமா? ஓர்ந்து பார்ப்பார்களாக.
  தளர்தல்-சோர்வடைதல். மூப்பு-முதுமை. ஈன்றோர்-தாய்தந்தையர். வன்மொழி-கடுஞ்சொல். இடைந்து-வருந்தி. முனிவு-சினம்.
 

1

  வேறு
  ஈன்றார் உடன்பிறந்தார் இவர்ப்பேணல் எழிலாம்
600
உரியவர்யா வரினுமனை தந்தையுற
    வேமுன்னா முவர்தாம் நம்மிற்
பெரியவராய் நம்பயனொன் றேகருதும்
    பெற்றியினாற் பெட்பி னன்னார்
பிரியம்பெறுப் பினையுணர்ந்தவ் வாறொழுகி
    யவரோடும் பிறந்த மைந்தர்
அரிவையரவ் வனைதந்தை யனையரென
    நினைத்தோம்ப லழகாம் நெஞ்சே.
  மனமே! நமக்கு மும்மைக்கு முரியார் எல்லாரினும் அன்னையும் அத்தனுமே முதன்மையராவர். அவரே எல்லா வகையானும் நமக்குப் பெரியவராவர். அவர் நம்முடைய நன்மையொன்றே கருதும் நல்லுளத்தன்மையர். அத்தன்மையினால் அவர் தம் விருப்பை வெறுப்பைக் குறிப்பாலுணர்ந்து அவர் விருப்பின்படி யொழுகல் வேண்டும். அவருடன் பிறந்த ஆண் பெண் இருபாலாரையும் அவரெனவே கொண்டு பேணல் வேண்டும். அன்பு செய்து அவர்கள் மகிழுமாறு அடங்கி யொழுகல் வேண்டும்; அதுவே ழுஎன்னோற்றான் கொல் என்னும் சொல்ழுலையுண்டாக்கும் நன்மக்கட்குரிய தக்க எழிலாகும்.
  உரிமை-நன்மைநாடும் வேட்கை. பிரியம்-விருப்பம். மைந்தர்-ஆடவர்; ஆண். அரிவையர்-மகளிர்; பெண்.
 

2

                         ----------